கண்ணியமும் மகத்துவமும் மிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்:
உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்த தீங்கும் தராது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழமையாக அறிபவன். (அல்குர்ஆன் 3:1-20)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தனக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதவரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவராகமாட்டார்.(அறிவிப்பவர்: அனஸ்(ரலி) புகாரி)
இடஒதுக்கீடு! பன்முகத்தன்மை கொண்ட இந்திய தேசத்தில் வாழும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அடிப்படையான வாழ்வாதார உரிமை தான் இடஒதுக்கீடு. நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் பயன்பெற வேண்டிய நன்நோக்கில் அரசியலமைப்பு ரீதியாக ஏற்படுத்தப்பட்டதுதான் இடஒதுக்கீடு. செல்வாக்கு மிக்க தங்கள் தலைவர்களால் சில சமுதாயத்தினரும் கடுமையான போராட்டங்களால் சில சமுதாயத்தினரும் இந்த உரிமையை பெற்று நிலைநாட்டி வருகின்றனர்.