Showing posts with label பொதுக்குழு/செயற்குழு. Show all posts
Showing posts with label பொதுக்குழு/செயற்குழு. Show all posts

2.2.15

மாவட்ட செயற்குழு-புதுக்கோட்டை மாவட்டம்






புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் அப்துல் குத்தூஸ் அவர்கள் தலைமையில் 01.02.2015 அன்று அறந்தாங்கி TNTJ மர்கஸில் காலை 7 மணிக்கு நடை பெற்றது இதில் மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள் 

தாவா பணியில் சிறப்பாக செயல்பட்ட மூன்று கிளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது 

முதல் பரிசு:அறந்தாங்கி (பத்தாயிரம் மதிப்புள்ள மெகா போன்)
இரண்டாம் பரிசு:முக்கனாமலை பட்டி (இரண்டாயிரம் மதிப்புள்ள புத்தகம்)

மூன்றாம்பரிசு:அம்மாபட்டினம் (ஆயிரம் மதிப்புள்ள புத்தகம் )
                                                                                                            

30.12.14

புதுக்கோட்டை மாவட்டத்தின் 9 வது பொதுக்குழு தீர்மானங்கள்


புதுகோட்டை மாவட்டத்தின் 9வது பொதுக்குழு மாநில செயலாளர் சகோ.ஆவடிஇப்ராஹிம் மற்றும் அப்துல் ஜப்பார் ஆகியோர் தலைமையில் கடந்த 28.12.2014 ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு புதுக்கோட்டை ஐஸ்வர்யா மஹாலில் நடை பெற்றது இதில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு 

தீர்மானம்1
பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள இராணுவ பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்து பச்சிளம் குழந்தைகள் உள்ளிட்ட நூற்றிக்கும் மேற்பட்டோரை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த தாலிபான் காட்டு மிராண்டிகளை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிப்பதுடன் இந்த காட்டுமிராண்டிகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இப்பொதுக்குழு தெளிவாக அறிவிக்கிறது.

 தீர்மானம்2
இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடாகும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் இந்தியத்திருநாட்டின் பலம்.இந்திய திரு நாட்டை ஒரு குறிப்பிட்ட மதத்தின் சார்பான நாடாக காட்ட முயற்சிக்கும் மத்திய அரசை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது

தீர்மானம்3
நம் இந்திய திரு நாட்டில் அரசியல் சாசனம் தான் விரும்பிய மதத்தை பின்பற்றும் உரிமையை ஒவொரு தனிமனிதருக்கும் வழங்கியிருக்கிறது.இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையை மறுத்து முஸ்லிம்களையும்,கிருத்தவர்களையும் கட்டாய மதமாற்றம் செய்யும் சங்க்பரிவார அமைப்புகளை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இது நாட்டை பிரிவினையை நோக்கி இட்டுசெல்லும் என மத்திய அரசை இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

தீர்மானம்4
ஆர்.புதுப்பட்டினத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த 21 குடும்பத்தை உள்ளூர் ஜமாத்தினர் ஊர்நீக்கம் செய்து அவர்களிடத்தில் தொடர்ந்து தீண்டாமையை கடைபிடித்து வருகின்றனர் சம்பந்த பட்டவர்கள் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்மனுவும் அளிக்கப்பட்டுள்ளது இவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேணுமாய் இப்பொதுக்குழு வழியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்5
புதுக்கோட்டை அறந்தாங்கி போன்ற ஊர்களில் முக்கிய சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கும்,பாதசாரிகளுக்கும் பெரும் இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிவதை பார்க்கமுடிகிறது,இதனால் விபத்துக்களும் நிகழ்கிறது கால்நடைகளை அப்புறப்படுத்தி பாதுகாப்பான சாலை பயணத்திற்கு வழி செய்யுமாறு சம்பந்தப்பட்ட நகராட்சிகளுக்கு இப்பொதுக்குழு கோரிக்கை வைக்கிறது.

தீர்மானம்6
மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகள் மழையின் காரணமாக குண்டும் குழியுமாக காட்சிதருகிறது போர்க்கால அடிப்படையில் சாலைகளை செப்பனிடுமாறு சம்பந்தப்பட்ட துறையை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது

தீர்மானம்7
மழையின் காரணத்தால் கொசுத்தொல்லை அதிகரித்திருக்கின்றது இதனால் பல தொற்று நோய்கள் ஏற்படும் வாய்பிருக்கின்றது வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் தகுந்த முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.  

மாவட்ட பொதுக்குழு புதுக்கோட்டை மாவட்டம்




புதுக்கோட்டை மாவட்டத்தின் 9வது பொதுக்குழு புதுக்கோட்டை ஐஸ்வர்யா மஹாலில் 28.12.2014 ஞாயிறு காலை 10.30 மணிக்கு மாநிலசெயலாளர் சகோ.ஆவடி இபுராஹீம் மற்றும் அப்துல் ஜப்பார் ஆகியோர் தலைமையில் கூடியது இதில் கீழ்க்கண்டவர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர் 
தலைவர்:அப்துல் குதுஸ் (அம்மாபட்டினம் ) 8344562682

செயலாளர்:GM.பாஷா(ஆர்.புதுப்பட்டினம் )8344562683

பொருளாளர்:கிழ்ர் முஹம்மத்(புதுக்கோட்டை )8344562688

துணை தலைவர்:அப்துல் பாசித்:(புதுக்கோட்டை )7373486066

து.செயலாளர்:முஹம்மத் இக்பால்(கரம்பக்குடி)8344562690

து.செயலாளர்:முஹம்மத் சாதிக்(ரெத்தினக்கோட்டை)9087559932

து.செயலாளர்:முஹம்மத் ஜலீல்(அறந்தாங்கி)9659330838

து.செயலாளர்:முஹம்மத் பாருக்(ஆலங்குடி)9786196977

து.செயலாளர்:சேக்  ஒளி (புதுக்கோட்டை) 9842088143

மாணவர் அணி செயலாளர்:முஹம்மத் சலீம்(அறந்தாங்கி ) 9003447920

மருத்துவ அணி:சிதிக்ரஹ்மான்(ஜெகதாபட்டினம்) 7373311668

8.9.14

செயற்குழு கூட்டம்-புதுக்கோட்டை மாவட்டம்-



அல்லாஹ்வின் மிகப்பெரிய கிருபையால் 07-09-14 காலை 6 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு கூட்டம் அறந்தாங்கி தவ்ஹீத் பள்ளியில் நடைப்பெற்றது.. இதில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோதரர் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை ஏன்? எப்படி செய்வது போன்ற செய்திகளை உரையாக தொகுத்து வழங்கினார்.. இதில் மாவட்டத்தின் அனைத்து கிளைகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.. அல்ஹம்துலில்லாஹ்...!

28.8.14

மாநில செயற்குழு - பத்திரிக்கை செய்தி ..





திருச்சியில் நடைபெற்ற மாநில செயற்குழு மற்றும் அதனுடைய தீர்மானங்கள் தொடர்பாக பத்திரிக்கைகளில்  வெளியிடப்பட்ட செய்தி... 

23.11.13

புதுக்கோட்டை மாவட்டம் - ஜனவரி 28 பத்திரிக்கை செய்தி ..... 18.11.2013




புதுக்கோட்டை மாவட்ட பொதுக்குழுவில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது .இதில் மாநில செயலாளர் சகோ.அப்துல் ரஹீம் அவர்கள் ஜனவரி 28 போராட்டம் ஏன் என்று கேள்விக்கு விரிவாக பேட்டி அளித்தார்.

20.11.13

புதுக்கோட்டை மாவட்டத்தின் பொதுக்குழு 16.11.2013






















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தின் பொதுக்குழு 16.11.2013 சனிக்கிழமை காலை 9 மணியளவில் TNTJ அறந்தாங்கி மர்கசில் சிறப்பாக நடைபெற்றது.மாவட்ட தலைவர் சகோ.அப்துல் குத்தூஸ் அவர்கள் தலைமை தாங்க,மாநில செயலாளர்களான அப்துல் ரஹ்மான் மற்றும் அப்துல் ரஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

 மாவட்ட பேச்சாளர் சகோ.மக்தூம் அவர்கள் அனைவரையும் வரவேற்று துவக்க உரை நிகழ்த்தினார்.பின் மாநில செயலாளர்கள் அப்துரல் ரஹ்மான் மற்றும் அப்துல் ரஹீம் ஆகியோர் "ஜனவரி 28"போராட்டம் குறித்து விளக்கி உரையாற்றினர்.மாவட்டத்தின் அனைத்து கிளைகளில் இருந்தும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் அதை தொடர்ந்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

தேர்ந்தெடுதக்கபட்ட புது நிர்வாகிகளின் பெயர்கள் :

மாவட்ட தலைவர்        :       சகோ.அப்துல் குத்தூஸ் 

மாவட்ட து.தலைவர்   :      சகோ.மக்தூம் 

மாவட்ட செயலாளர்   :       சகோ.குலாம் பாஷா 

மாவட்ட து .செயலாளர்  :  சகோ.அப்பாஸ் 

மாவட்ட து .செயலாளர்  :  சகோ.இக்பால் 

மாவட்ட து .செயலாளர்  :  சகோ.இஸ்மாயில் 

மாவட்ட பொருளாளர்    :   சகோ.ஹிலுர்   



7.5.13

புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு


புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு 05.05.13 அன்று மாலை அறந்தாங்கி தௌஹீத் பள்ளிவாசலில்   மாவட்ட தலைவர் அப்துல் குத்தூஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து கிளை நிர்வாகிகளும் கலந்துகொண்டார்கள். இதில் அதிரை உமர் அவர்கள் தௌஹீத்வாதிகளின் பண்புகள்,மற்றும் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.தாவா பணிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற கிளைகளுக்கு திரு குரான் (3*3=9) வழங்கப்பட்டது. 

தாவா பணிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற கிளைகள்
:
1.அம்மாப்பட்டினம்             : 3 திரு குரான்
2.அறந்தாங்கி                         : 3 திரு குரான்
 
3.முக்கனாமளைப்பட்டி  : 3 திரு குரான்

செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :


1. கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 தனி இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவேன் என்று ஜெயலலிதா வாக்களித்தார். இரண்டாண்டுகள் கடந்த பின்னரும் இது குறித்து அவர் அசாத்திய மவுனம் சாதித்து வருகிறார். கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வகையில் முஸ்லி ம்களுக்கு 7 சதவிகித இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்று இச்செயற்குழு  வற்புறுத்துகிறது.

2.நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் முஸ்லிம்களுக்கு பத்து சதவிகிதம் தனியாக இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று காரண காரியங்களுடன் பரிந்துரை செய்திருந்தார். மேலும் சென்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தருவதாக காங்கிரஸ் வாக்களித்தது. ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் முஸ்லி ம்களின் கோரிக்கையை அலட்சியம் செய்யும் மத்திய அரசை இச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் பரிந்துரை அடிப்படையில் முஸ்லி ம்களுக்கு தனியாக பத்து சத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசை இச்செயற்குழு வற்புறுத்துகிறது

3.பலநூறு ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்புக்காக வன்கொடுமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. நல்ல நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தை தலித் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். எந்த சிறு பிரச்சனையானாலும் சாதியின் பெயரைச் சொல்லி  திட்டியதாக புகார் கொடுக்கின்றனர். ஜாதி வேறுபாடு காட்டாமல் தலித் மக்களுடன் நட்புடன் பழகி வரும் முஸ்லி ம்கள் மீதும் இது போல் பல பொய்ப்புகார்கள் அளிக்கப்பட்டு ஜாமீனில் வரமுடியாத நிலையை முஸ்லிம்கள் சந்திக்கின்றனர். முற்றிலும் தவறாகப் பயன்படுத்தப்படும் இந்தச் சட்ட்த்தை அடியோடு நீக்க வேண்டும் என்று இச்செயற்குழு வற்புறுத்துகிறத.

4.தமிழ்நாடு தவ்ஹீத் மாநிலதலைமை அறிவித்துள்ள அக்டோபர் 8 வாழ்வுரிமை போராட்டத்தை பற்றி புதுக்கோட்டை மாவட்டத்தின் பட்டிதொட்டி எங்கும் துண்டு பிரசுரம் மூலமாகவும்,தட்டி விளம்பரம்,சுவர் விளம்பரம் மூலமாகவும் சமுதாயமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிக அளவில் இந்த அறப்போராட்டத்தில் மக்களை குழுமச் செய்யவேண்டும் என்று சமுதாய மக்களை  இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.


5.மே,மற்றும் ஜூன் மாதத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 முதல் 15 இரத்ததான முகாம்களை நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

6.மீமிசல் வார சந்தை நடைபெறும் இடத்தின்  அருகில் ( பாலத்திற்கு அடியில்) அணைத்து கழிவுகளும் குப்பைகளும் கொட்டப்படுகிறது இதிலிருந்து வரும் துர்நாற்றம் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவாகவும் தொற்று  நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் இதை உடனே சுத்தப்படுத்தி இங்கே குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டாமல் கண்காணிக்கும்படி சுகாதாரத்துறையை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

7.மணமேல்குடி அரசு மருத்துவமனையை தாலுகா அந்தஸ்திற்கு தரம் உயர்த்தவேனுமாய் சம்மந்தப்பட்ட துறையை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது
தீர்மானத்திர்க்கு பின் துவாவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.

5.2.13

புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு

புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு 20.1.13 அன்று மாலை ஆர்-புதுப்பட்டினம் கிளையில் மாவட்ட தலைவர் அப்துல் குத்தூஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து கிளை நிர்வாகிகளும் கலந்துகொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

4.7.12

புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு


புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு 1.7.12 அன்று அறந்தாங்கி தௌஹீத் மர்கசில் மாவட்ட தலைவர் அப்துல் குத்துஸ்  அவர்களின்  தலைமையில் நடைபெற்றது.இதில் அணைத்து கிளை நிர்வாகிகளும் கலந்து  கொண்டார்கள். மாவட்டத்தின் தாவா பணிகள்  குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒவ்வொரு தலைப்பிலும் 15 நிமிடங்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ் 

5.6.12

புதுக்கோட்டை மாவட்ட அவசர செயற்குழு


புதுக்கோட்டை மாவட்ட அவசர செயற்குழு மாவட்ட தலைவர் அப்துல் குத்துஸ் அவர்களின தலைமையில் காலை 6 மணிக்கு அறந்தாங்கி தௌஹீத் பள்ளியில் நடைபெற்றது. இதில் அனைத்து கிளை நிர்வாகிகளும் கந்து கொண்டார்கள் . இதில் மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. தீர்மானங்கள் அட்டாச் செய்யப்பட்டுள்ளது. 
 அல்ஹம்துலில்லாஹ்

2.10.11

புதுக்கோட்டையில் பரபரப்புடன் கூடிய மாவட்ட பொதுக்குழு கூட்டம் !!







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட பொதுக்குழு கடந்த 1-10-2011 காலை 10 மணிக்கு... புதுக்கோட்டை ஐஸ்வர்யா மஹாலில் நடைபெற்றது..

11.2.10

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று (13-11-2009) நடைபெற்றது. இதில் மாநில தலைவர்அல்தாஃபி மற்றும் பொதுச் செயலாளர்அப்துல் ஹமீத் அகியோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.

இம்மாட்டப் பொதுக்குழு கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட கிளைகளில் விசாரிக்கப்பட்டு பதில் அளிக்கப்பட்டது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அழைப்பு பணிகளை இன்னும் தீவிரமாக செய்வது குறித்தும் ஆலோசிக்கப்படடது