புதுகோட்டை மாவட்டத்தின் 9வது பொதுக்குழு மாநில செயலாளர் சகோ.ஆவடிஇப்ராஹிம் மற்றும் அப்துல் ஜப்பார் ஆகியோர் தலைமையில் கடந்த 28.12.2014 ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு புதுக்கோட்டை ஐஸ்வர்யா மஹாலில் நடை பெற்றது இதில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு
தீர்மானம்1
பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள இராணுவ பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்து பச்சிளம் குழந்தைகள் உள்ளிட்ட நூற்றிக்கும் மேற்பட்டோரை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த தாலிபான் காட்டு மிராண்டிகளை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிப்பதுடன் இந்த காட்டுமிராண்டிகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இப்பொதுக்குழு தெளிவாக அறிவிக்கிறது.
தீர்மானம்2
இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடாகும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் இந்தியத்திருநாட்டின் பலம்.இந்திய திரு நாட்டை ஒரு குறிப்பிட்ட மதத்தின் சார்பான நாடாக காட்ட முயற்சிக்கும் மத்திய அரசை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது
தீர்மானம்3
நம் இந்திய திரு நாட்டில் அரசியல் சாசனம் தான் விரும்பிய மதத்தை பின்பற்றும் உரிமையை ஒவொரு தனிமனிதருக்கும் வழங்கியிருக்கிறது.இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையை மறுத்து முஸ்லிம்களையும்,கிருத்தவர்களையும் கட்டாய மதமாற்றம் செய்யும் சங்க்பரிவார அமைப்புகளை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இது நாட்டை பிரிவினையை நோக்கி இட்டுசெல்லும் என மத்திய அரசை இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.
தீர்மானம்4
ஆர்.புதுப்பட்டினத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த 21 குடும்பத்தை உள்ளூர் ஜமாத்தினர் ஊர்நீக்கம் செய்து அவர்களிடத்தில் தொடர்ந்து தீண்டாமையை கடைபிடித்து வருகின்றனர் சம்பந்த பட்டவர்கள் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்மனுவும் அளிக்கப்பட்டுள்ளது இவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேணுமாய் இப்பொதுக்குழு வழியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்5
புதுக்கோட்டை அறந்தாங்கி போன்ற ஊர்களில் முக்கிய சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கும்,பாதசாரிகளுக்கும் பெரும் இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிவதை பார்க்கமுடிகிறது,இதனால் விபத்துக்களும் நிகழ்கிறது கால்நடைகளை அப்புறப்படுத்தி பாதுகாப்பான சாலை பயணத்திற்கு வழி செய்யுமாறு சம்பந்தப்பட்ட நகராட்சிகளுக்கு இப்பொதுக்குழு கோரிக்கை வைக்கிறது.
தீர்மானம்6
மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகள் மழையின் காரணமாக குண்டும் குழியுமாக காட்சிதருகிறது போர்க்கால அடிப்படையில் சாலைகளை செப்பனிடுமாறு சம்பந்தப்பட்ட துறையை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது
தீர்மானம்7
மழையின் காரணத்தால் கொசுத்தொல்லை அதிகரித்திருக்கின்றது இதனால் பல தொற்று நோய்கள் ஏற்படும் வாய்பிருக்கின்றது வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் தகுந்த முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
No comments:
Post a Comment