புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு 05.05.13 அன்று மாலை அறந்தாங்கி தௌஹீத் பள்ளிவாசலில் மாவட்ட தலைவர் அப்துல் குத்தூஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து கிளை நிர்வாகிகளும் கலந்துகொண்டார்கள். இதில் அதிரை உமர் அவர்கள் தௌஹீத்வாதிகளின் பண்புகள்,மற்றும் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.தாவா பணிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற கிளைகளுக்கு திரு குரான் (3*3=9) வழங்கப்பட்டது.
தாவா பணிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற கிளைகள்:
செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :
1. கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 தனி இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவேன் என்று ஜெயலலிதா வாக்களித்தார். இரண்டாண்டுகள் கடந்த பின்னரும் இது குறித்து அவர் அசாத்திய மவுனம் சாதித்து வருகிறார். கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வகையில் முஸ்லி ம்களுக்கு 7 சதவிகித இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்று இச்செயற்குழு வற்புறுத்துகிறது.
2.நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் முஸ்லிம்களுக்கு பத்து சதவிகிதம் தனியாக இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று காரண காரியங்களுடன் பரிந்துரை செய்திருந்தார். மேலும் சென்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தருவதாக காங்கிரஸ் வாக்களித்தது. ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் முஸ்லி ம்களின் கோரிக்கையை அலட்சியம் செய்யும் மத்திய அரசை இச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் பரிந்துரை அடிப்படையில் முஸ்லி ம்களுக்கு தனியாக பத்து சத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசை இச்செயற்குழு வற்புறுத்துகிறது
3.பலநூறு ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்புக்காக வன்கொடுமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. நல்ல நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தை தலித் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். எந்த சிறு பிரச்சனையானாலும் சாதியின் பெயரைச் சொல்லி திட்டியதாக புகார் கொடுக்கின்றனர். ஜாதி வேறுபாடு காட்டாமல் தலித் மக்களுடன் நட்புடன் பழகி வரும் முஸ்லி ம்கள் மீதும் இது போல் பல பொய்ப்புகார்கள் அளிக்கப்பட்டு ஜாமீனில் வரமுடியாத நிலையை முஸ்லிம்கள் சந்திக்கின்றனர். முற்றிலும் தவறாகப் பயன்படுத்தப்படும் இந்தச் சட்ட்த்தை அடியோடு நீக்க வேண்டும் என்று இச்செயற்குழு வற்புறுத்துகிறத.
4.தமிழ்நாடு தவ்ஹீத் மாநிலதலைமை அறிவித்துள்ள அக்டோபர் 8 வாழ்வுரிமை போராட்டத்தை பற்றி புதுக்கோட்டை மாவட்டத்தின் பட்டிதொட்டி எங்கும் துண்டு பிரசுரம் மூலமாகவும்,தட்டி விளம்பரம்,சுவர் விளம்பரம் மூலமாகவும் சமுதாயமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிக அளவில் இந்த அறப்போராட்டத்தில் மக்களை குழுமச் செய்யவேண்டும் என்று சமுதாய மக்களை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
5.மே,மற்றும் ஜூன் மாதத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 முதல் 15 இரத்ததான முகாம்களை நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
6.மீமிசல் வார சந்தை நடைபெறும் இடத்தின் அருகில் ( பாலத்திற்கு அடியில்) அணைத்து கழிவுகளும் குப்பைகளும் கொட்டப்படுகிறது இதிலிருந்து வரும் துர்நாற்றம் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவாகவும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் இதை உடனே சுத்தப்படுத்தி இங்கே குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டாமல் கண்காணிக்கும்படி சுகாதாரத்துறையை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
7.மணமேல்குடி அரசு மருத்துவமனையை தாலுகா அந்தஸ்திற்கு தரம் உயர்த்தவேனுமாய் சம்மந்தப்பட்ட துறையை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது
தீர்மானத்திர்க்கு பின் துவாவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.
No comments:
Post a Comment