16.1.11

புதுக்கோட்டை மாவட்ட தவ்ஹீத் ரியாத் கூட்டமைப்பின் கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், கடந்த 13-01-2011 வியாழன் இரவு 7 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின் கூட்டம், ரியாத் TNTJ மண்டல.... அலுவலகத்தில் நடைபெற்றது. அது சமயம் ஜனவரி ௨௭ போராட்டத்தின் அவசியம் நோக்கம் பற்றி ரியாத் மண்டல துணைச்செயலாளர் மௌலவி சாதிக்கீன் அவர்கள் உரையாற்றினார் மேலும் மாவட்டத்தில் ஏகத்துவப் பணி சிறக்க நம்மால் இயன்ற உதவிகளையும், ஆலோசனைகளையும் அனைவரும் தந்துதவ கேட்டுக் கொள்ளப்பட்டது.
தற்பொழுது மாவட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அதை சிறப்பாக நடத்திக்கொண்டு இருக்கும் மாவட்ட, கிளை நிர்வாகிகளுக்கும்  துஆ செய்வதோடு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.  அந்நிகழ்ச்சியில் இலவசமாக ஒரு கையேடு வழங்க புதுக்கோட்டை மாவட்ட ரியாத் கூட்டமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

No comments: