அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் புதுக்கோட்டை மாவட்டம்
முக்கனாமலைப்பட்டி கிளையில்14.4.2012 சனிகிழமை சுன்னத் ஜமாத்தின் பல்வேறு தீவிரமான
எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் அற்பணிப்பு & பொதுக்கூட்டம்
இனிதே நடைபெட்ட்றது . அல்ஹம்துலில்லாஹ் .....
இப் பொதுக்கூட்டத்தை எப்படியும் தடுத்தே ஆகவேண்டும் என்பதில்....
ஆரம்ப முதலே
முக்கனாமலைப்பட்டி சுன்னத் ஜமாத்தினர் தீவிரமாக இருந்தனர் . இப்
பொதுக்கூட்டத்தை தடுக்க அவர்களுக்கு கிடைத்த ஒரே ஆயுதம் நாம் வய்த்த "சுன்னத் ஜமாஅத் யார்?"
என்ற தலைப்புதான். இத் தலைப்பை காரணம் காட்டி உள்ளூர் காவல் துறையில்
தவ்ஹீத் ஜமாத்தினர் எங்களை திட்டுவதற்காக இந்த பொதுக்கூட்டம் போடுகின்றனர்
. ஆகவே இப் பொதுக்கூட்டத்தை தடை செய்யவேண்டும் என்று புகார் அளித்ததின்
பேரில் உள்ளூர் காவல்துறையினர் நமது கிளை நிர்வாகிகளை காவல்துறைக்கு
அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர் . தலைமையின் வழிகாட்டுதலின் படியும்
,மாவட்ட நிர்வாகிகளின் அறிவுறுத்தலின் படியும் அவர்களுக்கு தலைப்புதான்
பிரச்சனை என்றால் தலைப்பை மாற்றிக்கொள்கிறோம். எங்களுக்கு தாவா பணிதான்
முக்கியம் என்று கூறிவிட்டு அடுத்தநாள் பொதுக்கூட்டத்திற்கான ஆயத்தபநிகளில்
இறங்கிவிட்டனர் . என்னடா இது இவர்களின் பொதுக்கூட்டத்தை தடைசெய்யலாம்
என்று என்று நினைத்தால் இவர்கள் தங்களின் தலைப்பையே மாற்றிவிட்டார்களே
என்று எண்ணியவர்கலாக ஒரு பெரும்கூட்டதை திரட்டி SP,DSP அலுவலகத்திற்கு சென்று முறையிட்டனர் . உடனே DSP நமது நிர்வாகிகளையும் ,சுன்னத் ஜமாஅத்தினரையும் காவல்நிலயதுக்கு அழைத்து இரவு 10;30 மணி முதல் 12 மணிவரை பேச்சுவார்த்தை நடத்தினர். நமது
நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சுமையா (ரலி) பெண்கள் மதரசா
அருகில்போதுக்கூட்டம் நடத்தகூடாது என்றும் பஸ்டாண்டில் நடத்திக்கொள்ள
அனுமது அளிதானர் . எல்லாபுகழும் இறைவனுக்கே இரண்டு முறையும் தோல்வி கண்ட சுன்னத் ஜமாத்தினரின் நிலைமையை பார்த்தல் " அல்லாஹ்வின்
ஜோதியை தங்களுடைய வாயினால் ஊதி அணைத்துவிடலாம் என்று நினைகிறார்கள் .
ஆனால் காபிர்கள் வெறுத்தபோதும் அல்லாஹ் தான் ஜோதியை நிலைநாட்டுவான் " (திருகுரான் 61;8)
இந்த இறைவசனம் தான் நமக்கு நிறைவிற்கு வருகிறது . அல்லாஹ்வின் மாபெரும்
உதவியால் இந்த நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது . இதில் சகோதரர் முஜாகித் ( TNTJ
மாவட்ட பேச்சாளர் அவர்களும் , சகோதரர் பக்கிர் முகமது அல்தாபி (TNTJ
மாநில மேலான்மைகுழு உறுப்பினர் )அவர்களும் உரையாற்றினார்கள் . இறுதியல் ஆம்புலன்ஸ்
சாவியை அல்தாபி அவர்கள் கிளை தலைவர் அப்துல் ரசித்த அவர்களிடம்
வழங்கினார்கள் .இப்பதுக்கூட்டதிர்க்கு ஆண்களும் பெண்களும் ஆர்வமுடன் பெரும்
திரளாக கலந்து கொண்டார்கள் . இறுதியில் துவாவ்டன் பொதுக்கூட்டம்
நிறைவடைந்தது . அல்ஹம்துலில்லாஹ் .
No comments:
Post a Comment