கடந்த 28.04.2012 சனிக்கிழமை அன்று "இதை கேட்பாரே இல்லையா?" என்ற தலைப்பில்
தினத்தந்தியில் வெளியான தலையங்கம் முஸ்லிம்களை மிகுந்த கொதிப்பில்
ஆழ்த்தியுள்ளது. தாங்கள் சங்பரிவாரக் கும்பலின் கைக்கூலிகள் தான் என்பதை
தினத்தந்தி வெட்ட வெளிச்சம் போட்டு
காட்டும் வகையில் அந்தத் தலையங்கம் அமைந்துள்ளது.
காட்டும் வகையில் அந்தத் தலையங்கம் அமைந்துள்ளது.
இவ்வாறு விஷம் தோய்ந்த வினாக்களை எழுப்பி பொய்யான அவதூறுகளை முஸ்லிம்கள்
மீது சுமத்தி ஏதோ பாகிஸ்தானில் பிற மதத்தவர்களை நிர்ப்பந்தப் படுத்தி
ஆயிரக்கணக்கான இந்துக்களையும், கிறித்தவர்களையும் இஸ்லாத்திற்கு மாற
வைக்கின்றார்களே எனவே இந்து மற்றும் கிறித்தவர்களே! நீங்களும் நீங்கள்
சார்ந்த அமைப்புகளும் கொதித்தெழ வேண்டாமா?
அரசியல் கட்சிகள் கொதித்தெழ வேண்டாமா? என்ற கேள்விகளை கேட்டு எல்லோரையும்
முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு, அண்ணன் தம்பிகளாக தமிழகத்தில்
வாழ்ந்து வரும் இந்து, கிறித்தவ, முஸ்லிம் சகோதரர் களுக்கு மத்தியில்
கலவரத்தை உண்டு பண்ணி தமிழகத்தையும் குஜராத் போன்று சுடுகாடாகவும் கலவர
பூமியாகவும் மாற்ற வேண்டும் என்பதுதான் தினத்தந்தியின் திட்டம் என்பது அதன்
கேவலமான தலையங்க வார்த்தைகளிலிருந்து புலனாகின்றது.
முதலில் தினத்தந்தி எழுப்பியுள்ள வாதங்கள் முட்டாள் தனமானவை என்பதை நாம்
சுட்டிக்காட்ட விரும்பு கின்றோம். இவர்கள் சொல்வது போல இந்துக்களும்,
கிறித்தவர்களும் மிரட்டப்பட்டுதான் முஸ்லிம்களாக மாற்றப்படுகின்றார்கள்
என்ற குற்றச்சாட்டிற்கு ஏற்கனவே நாம் உணர்வு 16:31 இதழில் தெளிவாக தக்க ஆதாரங்களுடன் விளக்கமளித்திருந்தோம்.
கட்டாயப்படுத்தி மதம் மாற்றம் செய்து யார் ஒருவரையும் மிரட்டி ஒரு
சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்ள வைக்க முடியாது என்ற ஒரு அடிப்படை அறிவு கூட
இவர்களுக்கு இல்லை. அது மட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக
கிறித்தவ மதத்திலிருந்து இஸ்லாத்தை தழுவினாரே பாகிஸ்தானின் முன்னனி
கிரிக்கெட் வீரர் யூசுப் யோகானா. அந்த யோகானாவை மிரட்டி இஸ்லாத்தில்
வலுக்கட்டாயமாக சேர வைத்து முஹம்மது யூசுப் ஆக மாற்றியது யார்? அவரை
மிரட்டியது யார்? என்பதை தினத்தந்தி விளக்க வேண்டும்.
இந்த விஷமப் பத்திரிக்கை சுட்டிக்காட்டுகின்றதே அந்த ரிங்கிள் குமாரி, லதா
குமாரி, ஆஷா குமாரி ஆகியோர் ஏதோ முஸ்லிம்களால் கடத்தப்பட்டது போல் அவதூறை
அள்ளி வீசுகின்றனர். ஆனால் அவர்கள் தாங்கள் காதலிக்கும் முஸ்லிம்
வாலிபர்களை மணந்து கொள்வதற்காக தாங்களாக விரும்பி இஸ்லாத்தை ஏற்றுக்
கொண்டோம் என்று கடந்த 18.04.12 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வாக்குமூலம்
அளித்திருக்கையில் இவர்களை மிரட்டி வலுக்கட்டாயமாக மதமாற்றம்
செய்துள்ளார்கள் என்றும், அவர்கள் கோர்ட்டில் வந்து கதறி எங்கள் உயிருக்கு
ஆபத்து இருக்கிறது, எங்கள் பெற்றோருடன் போக விரும்புகிறோம் என்று
கெஞ்சினர். ஆனால் நீதிபதிகள் அந்த பெண்களை காப்பகத்திற்கு அனுப்பி
வைத்தனர், என்றும் அப்பட்டமான பொய்க் கதையை அவிழ்த்துவிட்டு, நடக்காத ஒரு
விஷயத்தை நடந்ததாகக் கூறி தமிழ்நாட்டில் உட்கார்ந்துக் கொண்டு அதற்கு
திரைக்கதை வசனம் எழுதி தங்களது காவி புத்தியை வெளிக்காட்டியுள்ளது இந்த
சங்பரிவாரத்தின் ஊதுகுழலாகிப் போன தினத்தந்தி.
பாகிஸ்தானிலுள்ள ஹிந்து கவுன்சில் சார்பில் குறிப்பாக மூன்று பெண்கள்
சம்பந்தமாக அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கும் தொடரப்
பட்டிருந்தது.மிரட்டப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட அந்த
இந்துப் பெண்கள் அளித்த வாக்குமூலத்தை அப்படியே கீழே தருகின்றோம்.
ஃபர்யால் (முன்னாள் ரிங்கிள் குமாரி), ஹஃப்ஸா பீபி (மருத்துவர் லதா), ஹலீமா
பீபி (ஆஷாகுமாரி) ஆகிய மூவரில் ஒருவரான ஃபர்யால் என்பவர்
செய்தியாளர்களிடம் கூறுகையில்:
எங்களை யாரும் கடத்தவுமில்லை. கட்டாய மதமாற்றமோ, கட்டாயக் கல்யாணமோ செய்திட
வில்லை. மாறாக, நாங்களாக விரும்பியே இம்முடிவை தேர்ந்தெடுத்தோம், என்றும்,
எங்கள் பெற்றோர்தான் அவ்வாறு கூறி வருகிறாhர்கள் என்றும் கூறியுள்ளனர்.
உண்மை நிலை இவ்வாறிருக்க இந்த சம்பவம் தான் தினத்தந்தியின் காதில் ஈயத்தைக்
காய்;ச்சி ஊற்றியது போல உள்ளதாம். இந்த அளவிற்கு மதவெறியாட்டம் போடும்
தினத்தந்திக்கு இன்னும் சில சம்பவங்களை சுட்டிக் காட்டுகின்றோம்.
பாகிஸ்தான் தெற்கு பகுதியில் உள்ள கராச்சியில் அமைந்துள்ள 1500 ஆண்டு கால
பழமை வாய்ந்த ' பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோவிலானது ஆக்கிரமிப்பு செய்து
கட்டப்பட்ட கோவில் என்று கூறியும் போக்குவரத்துக்கு அது இடையூராக உள்ளது
என்று கூறியும் உடனடியாக அந்த கோவிலை அகற்ற வேண்டும் என்று கூறியும்
அதற்கான ஆயத்தப்பணிகளை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டது. இந்நிலையில்
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் இந்து அமைப்புகள்
வழக்குத் தொடர்ந்ததையும் வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோவிலை
அகற்றக்கூடாது என்றும் கோவிலை புதுப்பிக்கும் பணியை கோவில் நிர்வாகம்
தொடரலாம் என்றும் பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்ததையும் கடந்த உணர்வு
16:29 இதழில் தெளிவுபடுத்தி, பாபர் மசூதி நிலவழக்கில் கட்டப் பஞ்சாயத்து
தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்து கோவில்களைப்
பாதுகாக்க தீர்ப்பு வழங்கிய பாகிஸ்தான் நீதிபதிகளைப் பார்த்து பாடம்
படிப்பார்களா? எனக் கேள்வி எழுப்பி இருந்தோம்.
அது மட்டுமல்லாமல் பாகிஸ்தான் அரசும் கடந்த மாதம் பாகிஸ்தானில் வசிக்கும்
சிறுபான்மையின மக்களுக்கான நலத்திட்டங்களில் ஒருபகுதியாக லாகூர், கராச்சி
உட்பட முக்கிய நகரங்களில் உள்ள 10 கோவில்களை பல லட்ச ரூபாய் மதிப்பில்
பாகிஸ்தான் அரசின் செலவில் புதுப்பிக்கும் பணிகளை செய்ததும் உலகத்திற்கே
தெரியும்.
இந்தச் செய்திகள் எல்லாம் தினத்தந்திக்கு தெரியாதது இல்லை. இவ்வளவு தெளிவாக
செய்திகள் இருந்தபோதும் அதை எல்லாம் இருட்டடிப்பு செய்து முஸ்லிம்களைக்
கொடூர உள்ளம் கொண்டவர்கள் போலவும் இஸ்லாத்தில் இப்படித்தான் பலவந்தம்
செய்து மதம் மாற்றுகிறார்கள் என்ற ரீதியிலும் செய்தி வெளியிட்டுள்ள
தினத்தந்தியை முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் தினத்தந்தி இதழுக்கு வர்த்தகரீதியாக விளம்பரங்களைக்
கொடுக்கும் இஸ்லாமியர்களும் அதை உடனடியாக நிறுத்தி இவர்களுக்குப் பாடம்
கற்பிக்க வேண்டும்.
இந்துக்களே முஸ்லிம்களுக்கு எதிராக அணி திரளுங்கள் என்று முஸ்லிம்
சமுதாயத்துக்கு எதிராக வன்முறையை தூண்டி நரேந்திரமோடிக்கு நிகராக
கலவரத்துக்கு வித்திட்டுள்ளது தினத்தந்தி.
நல்ல வேளை தமிழகத்தில் கலவரச்சூழல் ஏதும் இல்லை. அப்படி இருந்திருந்தால்
இந்த அயோக்கியனின் தூண்டுதல் காரணமாக எத்தனை தலைகள் உருண்டிருக்கும் என்பதை
எண்ணிப்பார்க்கும்போது உள்ளம் பதைபதைக்கிறது. குஜராத் கலவரத்தின் போது
சங்பரிவாரக் கும்பல் எப்படி தூண்டிவிட்டு முஸ்லிம்களைக்
கொன்று குவித்ததோ அதே வழியில்தான் தனது யுத்தத்தை தினத்தந்தி ஆரம்பித்து வைத்துள்ளது.
தமிழகத்தின் மோடியாகத் திகழும் தினத்தந்தி ஆசிரியனுக்கும் அந்த
பத்திரிகைக்கும் முஸ்லிம் சமுதாயம் தக்கபாடம் கற்பிக்க வேண்டும். போராட்டம்
நடத்தி இந்த அயோக்கியனுக்கு விளம்பரம் தேடிக் கொடுக்காமல் முஸ்லிம்களைக்
கொன்றொழிக்க தூண்டி விடும் தினத்தந்தியை வாங்கிப் படிக்கக் கூடாது என்பதை
தவ்ஹீத் ஜமாஅத் தனது செயல்திட்டமாக அறிவிக்கிறது.
இந்த செய்தியை ஜெராக்ஸ் (photo copy) எடுத்து ஒவ்வொரு வீடாக சென்று
தினத்தந்தியைப் புறக்கணிக்க வைக்க வேண்டிய அவசியத்தை எடுத்துச் சொல்லும்
மிக முக்கிய பொறுப்பு நம் அனைவர் மீதும் உள்ளது. இதை தவ்ஹீத் ஜமாஅத்தின்
கிளை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைத்து
முஸ்லிம்களிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்
கொள்கின்றோம். மே, ஜூன் ஆகிய இரண்டு மாதங்களையும் தினத்தந்தியின்
முஸ்லிம்களுக்கு எதிரான யுத்தத்திற்கு பதிலடி கொடுக்க அயராது உழைக்க
வேண்டும்.
பம்பரமாய் சுழன்று இஸ்லாத்தின் எதிரிகளுக்குத் தக்க பாடம் கற்பிக்கும்
வகையில் அவர்களே எண்ணிப் பார்க்காத வகையில் தினத்தந்தியின் விற்பனையையம்
விளம்பர வருவாயையும் குறைத்துக் காட்டி தமிழக மோடிக்கு தக்க பாடம்
கற்பிப்போம்.
முஸ்லிம் அமைப்புகள் ஒன்று கூடி அறிக்கை வெளியிடுகின்றோம் என்ற பெயரில்
வெளியிடப்பட்ட அறிக்கையிலும் தினத்தந்தியை கண்டிக்கக் கூடிய வார்த்தைகள்
ஏதும் இல்லை. அவர்களும் தினத்தந்தியிடம் சரணாகதி அடைந்துள்ளனர்.
தினத்(வ)தந்தியின் விஷமத் தலையங்கம் இதோ இதை கேட்பாரே இல்லையா?
பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு என்று அன்று பாரதியார் பாடியது
எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. இந்திய மக்கள் அனைவருமே மிக பெருமையோடு
இந்த பாடலை பாடலாம் என்றாலும் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் போன்ற
சிறுபான்மையினத்தினர் நிச்சயமாக இந்திய நாட்டை அதன் மதச்சார்பற்ற தன்மையை
அதன் இறையாண்மையை நினைத்து நினைத்து பெருமகிழ்ச்சியோடு பாட வேண்டும்.
ஏனெனில் நமது அண்டை நாடான பாகிஸ்தான், அதுவும் இந்தியாவில் இருந்து
பிரிந்து சென்ற பாகிஸ்தானில் இப்போது சிறுபான்மையினர் படும் பாட்டை
பார்த்தால் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை பார்த்தால் வேதனையால்
நெஞ்சம் துடிக்கிறது.
மனித உரிமைக்காக இந்தியா எவ்வளவோ பாடுபடுகிறது. மதச்சார்பற்ற கொள்கையை
நம்முடைய தலையாய கொள்கையாக வைத்திருக்கும் இந்தியாவில் இருந்து மத
அடிப்படையில் பாகிஸ்தானை பிரித்துக் கொடுத்தது பற்றியே இன்னும் நாட்டில்
விமர்சனங்கள் வரத்தான் செய்கிறது. இந்தியாவில் சிறுபான்மை இனத்தவருக்கு
எவ்வளவோ சலுகைகள் வழங்கப்படுகின்றன. பெரும்பான்மையினத்திற்கு மறுக்கப்படும்
பல சலுகைகள் சிறுபான்மையினருக்கு வழங்கப்படுகின்றன. தனி இடஒதுக்கீடே பல
இடங்களில் இருக்கின்றன.
இப்போது மத்திய அரசாங்கம் நிறைவேற்றியுள்ள இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை
சட்டத்தின் கீழ் எல்லா பள்ளிக்கூடங்களிலும் 25 சதவீத இட ஒதுக்கீடு ஏழை
மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிறுபான்மையினர் நடத்தும் அரசு
நிதியுதவி பெறாத பள்ளிக்கூடங்களுக்கு மட்டும் விதி விலக்கு
அளிக்கபட்டுள்ளது.
இந்தியாவில் சிறுபான்மை மதத்தினர் குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கும்
இஸ்லாமியர்களுக்கும் எவ்வளவோ சலுகைகள் அவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில்
வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அண்டை நாடான பாகிஸ்தானுடன் நல்லுறவை வளர்ப்பதற்காக
நட்பை வளர்ப்பதற்காக இந்தியா நெருங்கி சென்று கொண்டிருக்கும் இந்த
நேரத்தில் அங்குள்ள இந்து மதத்தினரும் கிறிஸ்தவ மதத்தினரும் மற்றும்
சிறுபான்மை சமுதாயத்தினரும் படும்பாடுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகளையும்
கேட்டால் நெஞ்சு வெடித்து விடும் போல் இருக்கிறது. இவர்களை எல்லாம்
காபிர்கள் அதாவது இறைவன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் என்ற தலைப்பில் தான்
பாகிஸ்தான் வைத்துள்ளது.
இதை விட பெரிய கொடுமை - இந்து இளம் பெண்களும் கிறிஸ்தவ இளம் பெண்களும்
கடத்தப்பட்டு அவர்கள் இஸ்லாம் மதத்தை தழுவ வேண்டும் என்று
நிர்பந்தப்படுத்தி அவர்களை மதம் மாற்றி முஸ்லிம் இளைஞர்களுக்கு திருமணம்
நடத்தி வைக்கிறார்கள். சமீபத்தில் ரிங்கிள்குமாரி, டாக்டர் லதா, ஆஷாகுமாரி
ஆகிய 3 இந்து பெண்கள் கடத்தப்பட்டு முஸ்லீமாக மாற்றப்பட்டு இஸ்லாமிய
இளைஞர்களுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்பட்டனர். அவர்களின்
பெற்றோர் தங்கள் மகள்களை மீட்டுத் தர வழக்கு தொடர்ந்தனர். அந்த பெண்களும்
கோர்ட்டில் வந்து கண்ணீர் விட்டு கதறி எங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது.
எங்கள் பெற்றோருடன் போக விரும்புகிறோம் என்று கெஞ்சினர் ஆனால் நீதிபதிகள்
அந்த பெண்களை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகு அங்கு ஏதோ விசாரணை நடந்ததாகவும் அதில் அந்த பெண்கள் தங்கள்
முஸ்லிம் கணவர்களுடனே செல்ல விரும்புவதாக தெரிவித்ததாகவும் பாகிஸ்தான் உச்ச
நீதிமன்ற ரிஜிஸ்தரார் அலுவலகத்தில் தெரிவித்ததாக கோர்ட்டில் தெரிவித்து
இருக்கிறார்கள்.
பகிரங்கமாக கோர்ட்டில் எங்கள் பெற்றோரிடம் செல்ல விரும்புகிறோம் என்று
சொன்ன இந்து பெண்கள், காப்பகத்தில் எங்களை கடத்தி மணமுடித்த முஸ்லிம்களுடனே
செல்ல விரும்புகிறோம் என்று சொன்னார்களாம். கேட்கவே வேடிக்கையாக
இருந்தாலும் நம்முடைய காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதுபோல் இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தானில் 800 கிறிஸ்தவ பெண்களும், 450 இந்துப்
பெண்களும் கடத்தப்பட்டு கட்டாயம் மதம் மாற்றப்படுவதாக செய்திகள் வருகிறது.
இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இழைக்கப்படும் இந்த கொடுமையை
யாருக்கும் கேட்கவில்லையா? அரசியல் கட்சிகள் என்ன செய்கிறார்கள். இந்து,
கிறிஸ்தவ அமைப்புகள் கொதித்து எழ வேண்டாமா? மத்திய அரசாங்கம் தீவிர
விசாரித்து பாகிஸ்தானுக்கு கண்டனமும் தெரிவித்து இதுபோல் இன்னொரு சம்பவம்
நடக்காமல் இருக்க சர்வதேச அமைப்புகளிடம் புகார் செய்திருக்க வேண்டாமா?
என்பது தான் மக்களின் ஆழ்மனதில் இருந்து வெளிவரும் கவலை தோய்ந்த குரல்
என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.
No comments:
Post a Comment