புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக அறந்தாங்கி தௌஹீத் பள்ளிவாசலில் 27.5.12 அன்று மாவட்ட தலைவர் அப்துல் குத்துஸ் அவர்களின் தலைமையில் மாவட்ட தர்பியா
நடைபெற்றது. இதில் சகோதரர் மஜீத் மாவட்ட துணை தலைவர் அவரர்கள் துவக்க உரையாக "தர்பியாவின் அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்பு சகோதரர் சல்மான் மாநில பேச்சாளர் அவர்கள் "வழிகெட்ட கொள்கைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், சகோதரர் மக்தூம் அவர்கள் "எப்படி தொழுவது?" என்று செய்துகாட்டினார்கள்.பின்பு மேலான்மைக்குழு உறுப்பினர் சகோதரர் M.I. சுலைமான் அவர்கள் "தௌஹீத் வாதிகளின் பண்புகளும் , நிர்வாகிகளின் எவ்வாறு செயல்படவேண்டும் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . இதில் கிளை நிவாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள் . துவாவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது. அறந்தாங்கிக் கிளை சகோதரர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment