என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ?
+2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவ மாணவிகளிடம் ஒரு விதமான குழப்பங்கள் இருக்கும். ஒரு சில மாணவ மாணவிகள் எதிர்பார்த்ததை விட அதிகம் மதிப்பென்கள்
எடுத்த மகிழ்ச்சியில் திகைத்து இருப்பார்கள். ஒரு சில மாணவ மாணவிகள் எதிர்பார்த்த மதிப்பென்கள் கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தில் இருப்பார்கள். ஒரு சிலர் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் சிக்கி தவித்து கொண்டு இருப்பார்கள்.
இப்படிபட்ட குழப்பத்தை தவிர்க்கும் நோக்கத்தில் மாணவ மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் வழிகாட்ட தான் என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? என்ற செய்தி வெளியிடபட்டுள்ளது.
குழப்பத்திற்க்கு காரணம் :
இன்றைய மாணவ சமுதாயத்தில் பலர் ஒரு இலக்கே இல்லாமல் படித்து வருவதை கல்வி வழிகாட்டுதல் தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) மாணவர் அணிக்கு வரும் தொலைபேசி அழைப்புகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.
காரணம், தான் என்ன படிக்க போகின்றோம் என்பதை மாணவர்கள் முடிவு செய்ய தவறியது. குறிப்பாக இந்த நிலை இஸ்லாமிய சமுதாயத்தில் அதிகமாக காணபடுகின்றது.
இந்த நிலைக்கு காரணம் தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் பார்த்து கொள்ளலாம். பெற்றோகளாக பார்த்து ஏதாவது கல்லூரியில் ஏதாவது படிப்பில் சேர்த்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் மாணவ மாணவிகள் இருந்து வருவது தான்.
பெற்றோர்களோ தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்க்காக அழைந்து திரிந்து சமுதாயத்தில் உள்ள சில கல்வியாளர்களிடத்தில் ஆலோசனைகளை கேட்டு இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து யாரோ கொடுத்த அலோசனைபடி ஒரு படிப்பில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து விடுகின்றனர். தமது பிள்ளைக்கு அந்த படிப்பில் ஆர்வம் உள்ளதா? நமது பிள்ளையால் அந்த துறையில் வெற்றிகரமாக செயல்பட முடியுமா? என்பதை எல்லாம் அதிமான பெற்றோர்கள் யோசிப்பது கிடையாது.
ஒரு வேலை தனது பிள்ளை +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலோ அல்லது குறைவான மதிப்பென்கள் பெற்றுவிட்டாலோ அவர்களை திட்டி தீர்த்து இதற்க்கு பிறகு அவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற வழிகளே இல்லை என்பது போல ஒரு தோற்றத்தை அவர்கள் முன்னிலையில் ஏற்ப்படுத்தி வருகின்றோம்.
ஏற்கனவே தேர்வில் தோல்வி அடைந்து அல்லது குறைந்த மதிப்பென்கள் வாங்கி விரக்தியில் இருக்கும் மாணவ மாணவிகள் பெற்றோர்களின் இந்த போக்கால் அதிக மண அழுத்தத்திற்கு உட்படுத்தபடுகின்றனர்.
நிறைந்த மதிப்பென்கள் பெற்றாலோ அல்லது குறைந்த மதிப்பென்கள் பெற்றாலோ அல்லது தேர்வில் தோல்வி அடைந்தாலோ முன்னேற இந்த காலகட்டத்தில் பல வழிகள் திறந்து உள்ளன என்பதை பெற்றோர்களோ அல்லது மாணவ மாணவிகளோ அறிவது கிடையாது.
பத்தாம் வகுப்பிற்க்கு பிறகு என்ன படிக்கலாம்?
பத்தாம் வகுப்பு முடித்தவுடன் மாணவ மாணவிகள் பரவலாக தேர்ந்தேடுப்பது மேல்நிலை பள்ளி கல்வியை தான். இதில் பல பிரிவுகள் உள்ளன மருத்துவம் சார்ந்த படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் உயிரியல் பிரிவையும் பொறியியல் சார்ந்த படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் கம்யூட்டர் சயின்ஸ் பிரிவையும், நிர்வாகம் மற்றும் வணிகவியல் தொடர்பான படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் வணிகவியல் சார்ந்த பிரிவுகளையும் ஏனைய மாணவர்கள் வெகேஷனல் பிரிவு எனபடும் தொழிற்பயிற்ச்சி பிரிவுகளை தேர்ந்தேடுத்து படிக்கின்றனர்.
ஒரு சிலர் பள்ளி படிப்புகளுக்கு பயந்து கொண்டு நல்ல மதிப்பென்கள் எடுத்து இருந்தாலும் சரி பாலிடெக்னிக் என்று கூறப்படும் டிப்ளோமா படிப்புகளில் சேர்ந்து படிக்கின்றனர். இந்த பாலிடெக்னிக் படிப்புகளில் சேரும் பெரும்பாலான மாணவர்கள் அந்த துறையை விரும்பி எடுப்பது இல்லை கடந்த காலத்தில் பள்ளி படிப்பில் ஏற்ப்பட்ட கசப்பான அனுபவங்களாலும் பள்ளியில் அதிகம் உள்ள மன அழுத்தத்தின் காரணத்தாலும் பாலிடெக்னிக் படிப்புகளில் சேர்ந்துவிடலாம் இதில் சேர்ந்தால் கல்லூரியில் மாணவர்கள் இருப்பது போல கவலை இன்றி நம்மால் இருக்க முடியும் என்ற தவறான எண்னத்தில் இதனை தேர்ந்து எடுக்கின்றனர். மற்றும் சிலர் +2முடித்து பொறியியல் முடித்தாலும் சரி டிப்ளோம முடித்துவிட்டு பொறியியல் படித்தாலும் சரி 6வருடங்கள் தானே ஆகும் என்று தவறான கணக்கு போட்டு பாலிடெக்னிக் படிப்புகளில் சேர்கின்றனர்.
படிப்பை முடிக்கும் கால அவகாசம் என்னவே ஒன்று தான் ஆனால் இன்றைய சூழ்நிலையில் பாலிடெக்னிக் முடித்து கலந்தாய்வில் சேர்வது என்பது +2முடித்து கலந்தாய்வில் அரசு ஒதுகீட்டில் பொறியியல் சேர்வதை காட்டிலும் மிகவும் கடினமான ஒன்றாக தான் நடைமுறையில் உள்ளது என்பதை மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் சிந்திக்க கடமைபட்டுள்ளனர்.
சென்ற வாரம் அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் மண்ணார் ஜவஹர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் +2முடித்து கலந்தாவிற்க்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் கண்டிப்பாக சீட் கிடைக்கும் என்று தெரிவித்திருந்தார். இதுவே பாலிடெக்னிக் முடித்து கலந்தாய்விற்க்கு விண்ணப்பித்தோம் என்றால் அரசு ஒதுக்கீட்டில் லேட்ரல் என்டிரி எனப்படும் நேரடியாக இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதாக இருந்தால் அதிகமான விழுக்காடுகளை நாம் டிப்ளோம படிப்பில் பெற்று இருக்க வேண்டும் இல்லை என்றால் அரசு ஒதுகீட்டில் கிடைப்பதில் சிரமம் ஏற்ப்படும்.
தேர்ச்சி பெறதாத மாணவர்களும் தேர்ச்சி பெறவில்லையே என்று கவலை கொள்ளாமல் மனம் தளராமல் உறுதியோடு உடனடி மறுதேர்விற்க்கு விண்ணப்பித்து எழுதலாம் அல்லது சிறிது காலம் அவகாசம் எடுத்து எழுத வேண்டும் என்று நினைப்பவர்கள் படிப்பதற்க்கு அவகாசம் எடுத்து கொண்டு அந்த காலகட்டத்தில் ஐ.டி.ஐ போண்ற தொழிற் படிப்புகளை படிக்கலாம்.
மாணவ மாணவிகள் டிப்ளோம படித்தால் போதும் அல்லது இளநிலை பட்ட படிப்பை(Bachelor Degree) முடித்தால் போதும் என்று இல்லாமல் முதுநிலை பட்ட படிப்பை(Master Degree) முடிக்க முயற்சி செய்ய வேண்டும். ஏன் என்றால் போட்டிகள் அதிகம் நிறைந்த இந்த காலகட்டத்தில் இளநிலை பட்ட படிப்புகள் கூட பள்ளி படிப்புகளை போல தான் பார்க்கபடுகின்றது.
+2விற்க்கு பிறகு என்ன படிக்கலாம் ? :
+2வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் பரவலாக தேர்ந்தெடுக்கும் துறைகள் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் தொடர்பான படிப்புகள் ஆகும்.
மருத்துவத்தை பொறுத்த வரை MBBS, BDS, B.Pharm, BHMS, BSMS என்று பல்வேறு பிரிவுகளாக படிப்புகள் கொட்டி கிடக்கின்றன. மருத்துவ கட் ஆஃப் மார்க் குறைந்தால் MBBS, BDS, B.Pharm போண்ற படிப்புகளை படிக்க முடியவில்லையே என்று கவலை கொள்ளும் பெற்றோகளுக்கு வளர்ந்து வரும் ஹோமியோபதி(BHMS) , சித்தா(BSMS) போண்ற மாற்று மருத்துவ படிப்புகளை பற்றிய ஞானம் அதிகம் இருப்பது கிடையாது.
அதே போல தான் பொறியியல் படிப்புகளும் பொறியியல் கல்லூரியில் கலந்தாய்வில் இடம் கிடைக்குமா இல்லையா என்ற சந்தேகத்தில் பெற்றோர்கள் பல அயிரங்களையும் இலட்சங்களையும் கொட்டி கொடுத்து தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் தங்கள் பிள்ளைகளுக்கு இடம் பெறுவதை நாம் பரவலாக பார்க்கின்றோம்.
இன்றைய நிலையில் அதிகரித்துவரும் பொறியியல் கல்லூரியின் எண்ணிகையாலும் இஸ்லாமியர்களுக்கு இருக்கும் 3.5 % இட ஒதுக்கீட்டாலும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்பதை யாரும் அறிவது கிடையாது.
கடந்த ஆண்டு கலந்தாய்வில் ஒரு இலட்சத்து பத்தாயிரம் இடங்கள் பூர்த்தி செய்யபட்டன நாற்ப்பதாயிரம் இடங்கள் நிரப்பபடாமல் இருந்தன என்பதையும் சுட்டிகாட்ட கடமைபட்டுள்ளே.
பொறியியல் படிப்புகளில் அதிகம் மாணவர்கள் நாட்டம் கொள்வதால் இன்றைக்கு பல கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை மந்தமாகவே நடந்து வருகின்றது ஏன் பல கல்லூரிகள் பல துறைகளை இழுத்து பூட்டும் நிலை கூட ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.
இதற்கான உதாரணம் சென்னை மற்றும் சுற்று வட்டாரங்கிளில் சென்னை பல்கலைகழகத்தின் கீழ் செயல்பட்ட பல கல்லூரிகளில் மைக்ரோ பயோலஜி, பயோ கெமிஸ்ட்ரி போண்ற பல துறைகளை சேர்க்கை இல்லை என்று பல கல்லூரிகள் நீக்கின என்பது குறிப்பிடதக்கது.
பொறியியல் படிப்புகள் அளவிற்க்கு ஏன் அதை விட அதிகம் வேலைவாய்புகளை தரக்க்கூடிய BA(History), BA(English), BBA, BBM,
B.Com(General), B.Com(CS), B.Com(Corporate Secretaryship),
B.Sc(Mathematics), B.Sc(Physics), B.Sc(Chemistry), B.Sc(Computer
Science), BCA, B.Sc(Micro Biology), B.Sc(Bio Chemistry), B.Sc(Zoology), B.Sc(Botany) போன்ற படிப்புகள் கலை மற்றும் அறிவியல் பிரிவில் அதிகம் உள்ளன என்பது குறிப்பிட தக்கது. அது மட்டும் இல்லாமல் இன்றைக்கு பொறியியல் பிரிவில் என்னென்ன துறைகள் எல்லாம் இருக்கின்றதோ அனைத்து துறைகளும் அறிவியல் பிரிவான B.Sc என்ற பட்டத்திலும் வழங்கபடுகின்றது என்பதும் குறிப்பிடதக்கது.
அது போல பொது தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களும் சரி நமது வாழ்க்கையின் வளர்ச்சி முடிந்துவிட்டதே என்று கவலை கொல்ல தேவை இல்லை ஏன் என்றால் இன்றைய காலகட்டத்தில் டிப்ளோம மற்றும் சான்றிதழ் படிப்புகள் அதிகம் அதிகம் காணபடுகின்றன.
உதாரணமாக எடுத்து கொண்டால் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் டிப்ளோம படிப்புகள் பற்றி மட்டும் தான் நாம் அறிந்து வைத்து இருப்போம். இதை தவிர்த்து பல பல்கலைகழகங்கள் 10ஆம் முடித்து இருக்கும் மாணவர்களுக்கு பல விதமான டிப்ளோம படிப்புகள் தொலைதூர படிப்பு முறையில் வழங்கபடுகின்றன. தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவ மாணவிகள் மறுதேர்வு எழுதி தேர்ச்சி அடையும் வரை நேரத்தை வீணடிக்காமல் இது போண்ற படிப்புகளில் சேர்ந்து பயனடையலாம்.
எங்கு படிக்கலாம் ? :
இன்றைய கலகட்டத்தில் பெற்றோர்களுக்கும் சரி மாணவர்களுக்கும் சரி என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் என்று அதிகமாக சிந்திப்பது கிடையாது. எங்கள் ஊருக்கு அருகாமையில் இருக்கும் கல்லூரியில் சேர்ந்துவிடலாம் ! நன்பர்கள் அல்லது செந்தகார பசங்க படிக்குற கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கின்றார்கள். நாம் சேர இருப்பது பள்ளியில் அல்ல என்பதை இந்த எண்ணத்தில் இருக்கும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சிந்திக்க கடமைபட்டுள்ளனர்.
பள்ளியை பொருத்தவரை நாம் எந்த பள்ளியில் படிக்கின்றோம் என்பது முக்கியம் இல்லை எப்படி படித்து வகுப்பிலோ மாவட்டத்திலோ அல்லது மாநிலத்திலோயோ முதலிடத்தில் வருகின்றோம் என்பது தான் முக்கியம். பல மாணவ மாணவிகள் தரம் குறைந்த பள்ளியாக கருதபடும் அரசு பள்ளிகளில் படித்து மாநில அளவில் முதலாவதாக வந்த செய்தியை எல்லாம் பார்த்து இருப்போம். ஆனால் கல்லூரியை பொருத்தவரை நாம் எந்த துறை எடுத்து படிக்கின்றோம் என்பது முக்கியம் இல்லை எப்படிபட்ட கல்லூரியில் படிக்கின்றோம் என்பது தான் முக்கியம்.
நாம் படிக்க கூடிய கல்லூரியில் தரம் எவ்வாறு உள்ளது, ஆய்வக வசதிகள் எவ்வாறு உள்ளது, நூலக வசதிகள் உள்ளத, பணிபுரிய கூடிய ஆசிரியர்கள் தகுதி வாய்ந்தவர்களா இவை எல்லாவற்றிக்கும் மேலாக அந்த கல்லூரியில் வளாக நேர்முக தேர்வுகளுக்கு தலை சிறந்த நிறுவனங்கள் வருகின்றனவா என்பதை ஆராய்ந்து சேர்க்க வேண்டும்.
இதில் நுனுக்கமாக கவணிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் இரு சில கல்லூரிகள் வளாக நேர்முக தேர்வு நடைபெறுவதாக விளம்பரம் செய்வார்கள் அந்த விளம்பரங்களுக்கு மயங்கி சேர்ந்தால் வளாக தேர்வுக்கு வரும் நிறுவனங்கள் உள்ளூரில் இயங்கி வரும் சிறிய நிறுவனங்களாக இருக்கும். நாம் தேர்ந்தேடுக்க கூடிய கல்லூரி பண்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளனவா என்பதை நாம் கவணிக்க வேண்டும்.
AICTE என்று அழைக்கபடும் இந்திய தொழில் நுட்ப கவுன்சில் அந்த கல்லூரியை அங்கிகரித்துள்ளதா என்பதையும். பல்கலைகழக ஆனை குழுவின்(UGC) தன்னாட்சி அமைப்பான NAAC என்று கூறப்படும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கிகார குழு அங்கிகரித்துள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும்.
ஒரு கல்லூரியை தேர்ந்தேடுக்கும் போது இவை அனைத்தையும் நாம் பரிசீலனை செய்ய வேண்டும் இதில் ஒரு விஷயத்தில் கவணம் செலுத்தவில்லை என்றாலும் நாம் படிக்கும் படிப்பிற்க்கு மதிப்பு இல்லாமல் போய்விடும் ஏன் ஒரு சில நேரத்தில் AICTE மற்றும் NAAC அங்கிகாரம் இல்லை என்றால் கஷ்ட்டபட்டு வாங்கிய பட்டம் கூட வேறும் பேப்பராக தான் பார்க்கபடும்.
எனவே மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கல்லூரி சேர்க்கையின் போது மேல் குறிப்பிட்ட அனைத்து விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
உங்கள் பகுதிக்கு அருகாமையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் என்ன படிக்கலாம்?? எங்கு படிக்கலாம் ?? என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாரு கேட்டுக் கொள்கின்றேம்.
டி.என்.டி.ஜே மாணவர் அணி
No comments:
Post a Comment