அறந்தாங்கியில் 15/11/2012 அன்று கிளை உறுப்பினர்கள் 10 க்கும்
மேற்ப்பட்டோர் வீடு வீடாக சென்று குழுவாக தனி நபர் தாவாவில் ஈடுப்பட்டனர்
இந்த பிரச்சாரம் அறந்தாங்கி அக்னி பஜார் மனிவிளான் தெரு குடியிறுப்பு
அருகில் நடைப்பெற்றது இதில் அப்துல்லா , ஆஷீப் , ஷேக் ஆகிய 3 முஸ்லிம்
சகோதரர்கள் மத்தியில் சகோதரர் சலீம் மற்றும் அறந்தாங்கி பள்ளி இமாம் சாதிக்
இணைந்து தாவா செய்தனர் .
இந்த பிரச்சார நிகழ்ச்சி நடைப்பெற்றபோது அருகில்
இருந்து வேடிக்கை பார்த்த பாண்டி என்று மாற்று மத சகோதரரை கிளை சகோதரர்கள்
உரிமையுடன் அழைத்தனர் . இதில் மிகுந்த ஆர்வம் அடைந்த அந்த சகோதரர் ,
பிரச்சாரக் குழுவினரின் மத்தியில் வந்தார் . அதன் பிறகு , தான் ஒரு
தி.க.கொள்கையுடையவன் என கூறினார் . சற்றும் தாமதிக்காமல் மறுகணமே இமாம்
சாதிக் அவர்கள் இஸ்லாம் கூறும் கடவுள் கோட்பாடுகளை தெளிவாக எடுத்துரைத்தார்
.
தனிநபர் தாவா என்கிற இந்த பிரச்சாரத்தின் இறுதியாக
மாற்று மத சகோதரர் பாண்டி அவர்களுக்கு T.N.T.J vs தி.க DVD யும் , வரும்
முன் உரைத்த இஸ்லாம் புத்தகமும் வழங்கப்பட்டது . முஸ்லிம் சகோதரர்கள் 3
பேருக்கும் மண்ணறை வாழ்க்கை புத்தகமும் வழங்கப்பட்டன .இந்த தனி நபர் தாவா
முயற்சி அருகில் இருந்த சகோதரர்களுக்கு மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை
பெற்றது .
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே .
No comments:
Post a Comment