தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறந்தாங்கி கிளையில் இமாம் முஜாஹித் அவர்கள் சரியான விழிப்புணர்வு இல்லாமல் அறந்தாங்கி பா.ஜ.க வில் பிரமுகராக இருக்கும் முகமது முஸ்தபா அவர்களுக்கு RSS,BJP, போன்றவர்களின் அடிப்படை கொள்கையும் அவர்கள் முஸ்லிம் மற்றும் இந்து சகோதரர்களுக்கிடையே உள்ள சகோதரத்துவதை சீர்குலைத்து மதவாதத்தை ஏற்படுத்த நிகழ்த்திய சதித்திட்டங்களையும், முஸ்லிம்களை அழிப்பதற்கு போட்ட திட்டங்களும், பயங்கரவாத செயல்களும் அதன் பின்னணிகளும் தெளிவாக விளக்கப்பட்டது.
மேலும் அவருக்கு இஸ்லாம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது...
இந்த சஹோதரருக்கு அறந்தாங்கி தவ்ஹீத் மர்கஸில் இரவு 8.30 மணியில் இருந்து 10.00 மணி வரை பா.ஜ.க வின் சதிச்செயல்கள் அனைத்தையும் விளக்கி விவரிக்கப்பட்டது.
இந்த நேரடி சந்திப்பில் சகோதரர். முகமது முஸ்தபா அவர்கள் சரியான விழிப்புணர்வு இல்லாமல் தான் செய்த தவறை உணர்ந்து பா.ஜ.க வில் இருந்து விலகிக்கொள்வதாக வாக்குறுதியும் அளித்துள்ளார்.
மேலும் அவருக்கு திருக்குரான் தமிழாக்கம்,வருமுன் உரைத்த இஸ்லாம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் போன்ற நூல்கள் இலவசமாக கிளையின் சார்பாக வழங்கப்பட்டது.
எல்லாப் புகழும் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவணுக்கே...
No comments:
Post a Comment