ஆலங்குடி கிளை சார்பாக புதிய மர்கஸ் கட்டுவதற்காக தலைமையகத்தின் ஒப்புதலுடன் வசூல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.நமது ஜமாத்தின் பணிகளில் ஈர்க்கப்பட்ட உள்ளூர் பெண்கள் இந்த புதிய மர்கஸ் கட்டும் பணிக்கு உதவும் விதமாக வசூல் செய்யும் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
இதை பொறுக்காத போலி சுன்னத்துவல் ஜமாத்தார்கள் நமது மர்கஸ் அமைய கூடாது என்பதற்காக தங்களுடைய தகவல் பலகையிலும் ஜும்மா மேடைகளிலும் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வந்தனர்.இதன் விளைவாக ஊரில் உள்ள பெண்களில் அதிகமானோர் பள்ளிக்காக நிதி கொடுக்க மறுத்துவிட்டனர் .
எனவே அந்த மக்களுக்கு விளக்கும் விதத்தில் 21.12.2013 அன்று அவசர பெண்கள் பயான் ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் சகோ.இஸ்மாயில் அவர்கள் "பள்ளி கட்ட தடை போடும் சுன்னத்வாதிகள்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.மேலும் "இரண்டு பள்ளிகள் இருக்கும் பொது மூன்றாவது பள்ளி எதற்கு?" என்ற விளக்கமும் கொடுக்கப்பட்டது.இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ் !!!!!!
No comments:
Post a Comment