இறைவனின் திருப்பெயரால்...
புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு 01.02.2015 அன்று அறந்தாங்கி TNTJ மர்கஸில் நடை பெற்றது அது குறித்து ஹிந்து மற்றும் தினகரன் நாளிதழில் வெளியான பத்திரிக்கை செய்திகள் மற்றும் தீர்மானம்
புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு 01.02.2015 அன்று அறந்தாங்கி TNTJ மர்கஸில் நடை பெற்றது அது குறித்து ஹிந்து மற்றும் தினகரன் நாளிதழில் வெளியான பத்திரிக்கை செய்திகள் மற்றும் தீர்மானம்
தீர்மானம்1
சமூக வலைதளங்களில் கருத்துச் சுதந்திரம் என்கிற போர்வையில் அநாகரீகமாகவும், அறுவறுக்கத்தக்க வகையிலும்,மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும் கருத்திடுவோரை கண்டறிந்து அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்2
நாட்டின் உணவு உற்பத்திக்கு ஆதாரமாக இருக்கின்ற விவசாய விளை நிலங்களை ரியல் எஸ்டேட் என்கிற பெயரில் பிளாட் போட்டு விற்பதை குற்றம் என்று அறிவிக்க உடனடியாக அவசர சட்டம் இயற்ற வேண்டுமாய் மத்திய மாநில அரசுகளை இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்3
எந்த நாடு வேளான்மை உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருக்கிறதோ அந்த நாடே எதிகாலத்தில் வல்லரசு நாடாக கருதப்படும் எனவே வேளாண்மை சார்ந்த துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து,வேளாண்மை துறையில் நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை கையாண்டு அழிந்து வரும் விவசாய தொழிலை பாதுகாக்க தகுந்த முன்னேற்பாடுகளை செய்ய வேண்டுமாய் இச்செயற்குழு மூலம் மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறோம்.
தீர்மானம்4
மது என்கிற அரக்கனுக்கு உழைக்கும் மக்களயும் ,மாணவர்களயும் அடிமையாக்கி தமிழகத்தை போதையில் தத்தளிக்க வைத்திருப்பது வேதனைக்குரிய விசயமாக இருக்கிறது
மதுவினால் இலட்சக்கணக்கான பெண்கள் கணவனை இழந்து விதவைகளாகவும்,அனாதைச் சிறுவர்கள் அதிகம் நிறைந்த மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது,இப்படி பல உயிர்களை கொன்று பெண்களை விதவைகளாக்கி,சிறுவர்களை அனாதைகளாக்கி கிடைக்கும் டாஸ்மாக் வருமானத்தின் மூலம் அரசுநிர்வாகத்தை நடத்த வேண்டுமா? என்பதை தமிழக அரசு மனசாட்சியுடன் சிந்தித்து மதுவை தடை செய்து தமிழகத்தை பூரண மது விலக்கு பெற்ற மாநிலமாக அறிவிக்க வேண்டுமாய் இச்செயற்குழு தமிழக அரசை வழியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்5
196 கிராமங்கள் மற்றும் 28 ஊராட்சிகளை கொண்ட மணமேல்குடி தாலுகாவில்,பலகோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அரசுமருத்துவமனை மக்கள் தொகைக்கு ஏற்ப போதிய மருத்துவர்களும்,செவிலியர்களும் இல்லாமல் செயலிழந்து காணப்படுகிறது.போர்கால அடிப்படையில் இந்த மருத்துவமனையை தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டுமாய் தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
தமிழக அரசு இந்த விசயத்தில் தொடர்ந்து மெத்தனம் காட்டினால் 196 கிராம மக்களையும் ஓன்று திரட்டி மருத்துவ மனையை இழுத்து மூடும் போராட்டத்தை தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் என்றும் இச்செயற்குழு எச்சரிக்கின்றது.
தீர்மானம்6
ஆர்.புதுப்பட்டினத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த 21 குடும்பங்களை சமூக புறக்கணிப்பு செய்து ஊர்நீக்கம் செய்துள்ள உள்ளூர் ஜமாஅத் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அந்த மக்கள் தங்கள் சொந்த ஊரில் சம உரிமையுடனும், பாதுகாப்புடனும் வாழ வழி செய்ய வேண்டுமாய் தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் இச்செயற்குழு வழியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்7
அறந்தாங்கியில் அனைத்து முக்கிய சாலைகளும் புதிய சாலை அமைப்பதற்காக JCB இயந்திரத்தின் மூலம் உடைக்கப்பட்டு ஒருவார காலமாக அறளை ஜல்லி கற்களாக காட்சியளிக்கின்றது சாலைப்பணிகளை மெத்தனமாக மேற்கொள்ளும் அறந்தாங்கி நகராட்சியை இச்செயற்குழு வன்மையாக கண்டிகிறது துரிதகதியில் சாலைப்பணியை மேற்கொள்ளுமாறு அறந்தாங்கி நகராட்சியை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
No comments:
Post a Comment