17.3.15

ஆலங்குடி TNTJ யின் மனிதாபிமான அவசர உதவி!!! 14/3/15

ஆலங்குடியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் இராஜேந்திரன் அவர்கள் 14-3-15 இரவு 12.30 மணிக்கு பணியை முடித்து பேருந்தை டெப்போவில் நிறுத்தி விட்டு உணவு அருந்துவதற்காக தமது இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ரோட்டில் நிலை தடுமாறி மயங்கி விழுந்து விட்டார். யாரும் கண்டுகொள்ளாத அந்நேரத்தில் அவ்வழியே சென்ற தவ்ஹித் சகோதரர் இச்செய்தியை ஆலங்குடி TNTJ கிளை நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தார். தகவலை அறிந்த உடன் கிளை ஆம்புலன்சை எடுத்துகொண்டு அவரை ஏற்றி ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் கீழே விழுந்ததில் காதில் அடிபட்டு அதிக இரத்தம் வந்ததால் உடனே புதுக்கோட்டை தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து மீண்டும் கிளை ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு கிளை நிர்வாகிகளுடன் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். அச்சமயம் அவருடன் உறவினர்கள் யாரும் இல்லாததால் கிளை நிர்வாகிகளே உடன் இருந்து கவனித்தனர், அவர் சுய நினைவு வந்த உடன் அவர் நம்மை பற்றி விசாரித்தார். அவருக்கு தூய இஸ்லாத்தை பற்றியும் நமது ஜமாஅத்தின் பொதுநல சேவை பற்றியும் எடுத்து சொல்லப்பட்டது. இதை கேட்டவுடன் அவர் கண்களில் கண்ணீர் மல்க சகோதரர்களை கட்டியணைத்துக்கொண்டார்.

இதைப்பற்றி மருத்துவர்கள் கூறும்போது சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்க உதவி செய்த நமக்கு பாராட்டுக்களையும் அப்படி செய்ய தவறி இருந்தால் அவர் இறந்திருக்க கூடும் என்றும் தெரிவித்தனர்.  ஏக இறைவனே அறிந்தவன்.

இச்சேவை அவருக்கு எவ்வித அம்புலன்ஸ் கட்டணமும் வசூலிக்காமல் இலவசமாகவே செய்யப்பட்டது. 
இதற்கான கூலியை ஏக இறைவனிடமே எதிற்பர்த்தவர்களாக கிளை நிர்வாகிகள்.   


  

No comments: