4.9.10

பெருநாள் தொழுகை

திடலில் தொழுகை 


பெருநாள் தொழுகையை மஸ்ஜித் (பள்ளி வாசல்) அல்லாத வேறு திடல்களில் தான் தொழ வேண்டும்.

பள்ளி வாசல்களில் தொழுவது அல்லாஹ்வின் ரசூல் காட்டி தராத பித்'அத்தான செயலாகும்
 ரசூல் (ஸல்) அவர்கள் , எந்த  ஒரு பெருநாளிலும் பள்ளி வாசலில் தொழவில்லை! திடலில் மட்டுமே தொழுதிருக்கிறார்கள்.

ரசூல் (ஸல்) அவர்கள் நோன்பு பெருநாளிலும் ஹஜ்ஜ் பெருநாளிலும் முசல்லா என்னும் திடலுக்கு செல்பவர்களாக இருந்தனர்.
அறிவிப்பாளர்: அபூ சையித்  அல்  குத்ரி (ரலி)
புஹாரி 956


பள்ளி வாசலில் தொழாமல் திடலில் தொழுவதற்கான காரணம்


இரு பெருநாட்களிலும் வீட்டில் உள்ள மாதவிடாய் பெண்களையும் கன்னிப்பெண்களையும் திடலுக்கு அனுப்புமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழும் இடத்திற்கு சென்று அவர்கள் செய்யும் துஆவில் கலந்து கொள்ளுமாறும் தொழுமிடத்தை விட்டும் மாதவிடாய் பெண்கள் விலகி இருக்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டோம். 
அறிவிப்பாளர்: உம்மு அதிய்யா (ரலி) 
புஹாரி 351  


பெண்கள் கட்டாயம் பெருநாள் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டும்

பெண்களில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே, எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்ள மேலாடை இல்லையெனில் என்ன செய்வது?", என்று கேட்டார். அதற்க்கு ரசூல் (ஸல்) அவர்கள், அவளுடைய தோழி, உபரியான ஆடையை இவளுக்கு அனையக்கொடுக்கட்டும், என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: உம்மு அதிய்யா (ரலி) 
புஹாரி 351  

No comments: