14.7.12

சிறுபான்மையின மாணவிகள் கல்வி உதவி பெறலாம்

           ப்ளஸ் -1 பயிலும் சிறுபான்மையின மாணவிகள் மத்திய அரசின் மௌலானா ஆசாத் கல்வி உதவித்தொகை பெற வரும் செப்டம்பர் 20 க்குள் விண்ணப்பிக்கலாம் .
                                     இது குறித்து மாவட்ட ஆட்சியர் வி.கலையரசி விடுத்துள்ள செய்திக்குறிப்பு :
         தமிழ்நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர்,கிறிஸ்தவர்,சீக்கியர்,புத்தர்,பார்சி ஆகிய மதங்களைச்சார்ந்த  ப்ளஸ் -1 வகுப்பில் பயிலும் மாணவிகளுக்கு
            ரூ12 ஆயிரம் கல்வி உதவித்தொகை இரு தவணைகளில் வழங்கப்படுகிறது.
              இதனை பெறுவதற்கு எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் குறைந்தது 55 % மதிப்பெண்கள் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில்  ப்ளஸ் -1 பயில்பவராக , குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திக்கு குறைவாக இருக்க வேண்டும்.விண்ணப்பத்துடன், ஆவணங்களை  இணைத்து, கல்வி நிலையத்தில் செப்டம்பர் 20 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் .
விண்ணப்ப உறுதி ஆவணம் மற்றும் விபரங்களை http:maef.nic.in இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யவேண்டும்.
          தலைமை ஆசிரியர், தாளாளர் ஆகியோர், பூர்த்தி  செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று சரிபார்த்து, உரிய சான்றுகளுடன் கையப்பம் செய்து The Secretary, Maulana Azad Education Foundation, Ministry Of Minority Affairs, Government of india, Cheims Ford Road, New Delhi-110 என்கிற முகவரிக்கு 30.9.12 மாலை 5 மணிக்குள் சேரும் வகையில் அனுப்ப வேண்டும்

No comments: