அறந்தாங்கி கிளை சார்பாக 02.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.கடந்த 20.12.2013 அன்று அறந்தாங்கி மண்டிகுள கிணற்றில் விழுந்து மன நலம் பாதிக்கப்பட்ட சகோதரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.இதனையடுத்து சகோதருடைய ஆவி நடமாடி கொண்டிருப்பதாக வதந்திகள் பரவி வந்த நிலையில்,பேய் பிசாசுகளை பற்றிய கட்டுக் கதைகளை முறியடிக்கும் வகையில் அறந்தாங்கி கிளை சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் நடததப்பட்டது.
மேலும் பிரச்சாரம் செய்வதற்காக தற்கொலை செய்து கொண்ட சகோதரர் வீட்டிலேயே மின்சாரம் எடுத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல்,அருகில் இருந்த 10 வீடுகளுக்கு பேய் பிசாசு உண்டா? என்ற புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது.சகோ.முஜாஹி த் அவர்கள் சிறப்பாக உரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment