23.4.11

ஏப்ரல் மாத புதுக்கோட்டை மாவட்ட தவ்ஹீத் ரியாத் கூட்டமைப்பின் கூட்டம்



கடந்த 21 -04 -2011 வியாழன் அன்று புதுக்கோட்டை மாவட்ட... ரியாத் TNTJ கூட்டமைப்பின் ஏப்ரல் மாத கூட்டம்,  ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது, அதில் ரியாத் மண்டல துணை செயலாளர் மௌலவி சாதிக்கீன் அவர்கள் குழந்தை வளர்ப்பு பற்றி உரை நிகழ்த்தினார்கள்,  மாவட்டத்தில் நடந்து முடிந்த நிகழ்சிகள் பற்றி விளக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து இஸ்லாத்தின் அடிப்படை வரலாறு தொடர்பாக கேள்விகள் கேட்டு பதில் அளிக்கப்பட்டது.  தினமும் நாம் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் பற்றியும், தினமும் காலை முதல் இரவு உறங்கும் வரை ஓத வேண்டிய து ஆ க்களை தொகுத்து எல்லோருக்கும் ஒரு பிரதி வழங்கப்பட்டது.  
இந்த து ஆ க்களை தினமும் கடைபிடிக்க உறுதி எடுத்துக்கொண்டு து ஆ ஓதி கூட்டம் முடிக்கப்பட்டது.  

No comments: