19.5.12

தமிழக மாணவர்களுக்கான பொறியல் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன


ஒற்றைசாளர முறைப்படி (counseling) பொறியியல் சேர்க்கை தமிழகத்தில் நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள். இந்த வருடத்திற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வழங்கப்படும் விண்ணப்பங்களை
பெறுவதற்கான கடைசி தேதி 31.05.2012.
இந்த முறைப்படி தமிழகத்தை சார்ந்த மாணவர்கள் அண்ணா பல்கலைகழக வளாகத்திலும், அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளிலும் , அரசு மற்றும் அரசின் உதவி பெறும் கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் (அரசின் மூலமாக நிரப்ப தந்த இடங்கள்) சேர்க்கை நடைபெறும்.
இந்த விண்ணப்ப படிவங்களை நேரடியாகவோ, தபால் மூலமோ அல்லது இணையத்தின் மூலமோ பெறலாம்விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டிய கடைசி நாள்  31.05.2012 மாலை 5:30 மணி வரை . 
விண்ணப்பபடிவத்தின் விலை - ரூ 500
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி :
The Secretary, Tamilnadu Engineering Admissions, Anna University, Chennai –  600 025.
விண்ணப்பங்களை இணையத்தில் பூர்த்தி செய்ய செல்ல வேண்டிய முகவரி http://www.annauniv.edu/tnea2012/










விண்ணப்பங்கள் நேரடியாக கிடைக்கும் இடங்கள் :
                
                 
                 
விண்ணப்பங்களை தபால் மூலம் பெற - The Secretary, Tamilnadu Engineering Admissions, Anna University, Chennai – 600 025 என்ற முகவரிக்கு 700 ரூபாய்க்கு DD எடுத்து விண்ணப்பத்தை கேட்டு ஒரு கடிதத்தையும் இணைத்து அனுப்பவும்
- TNTJ மாணவர் அணி

No comments: