டிசம்பர் 6 வந்துவிட்டாலே காவல்துறை மற்றும் உளவுத்துறையினரின் பில்டப் ஒருபக்கம் இருந்தாலும் இந்தக்காவி பயங்கரவாதிகளின் அட்டூழியம் அளவுக்கதிகமாகிவிட்டது அவ்வப்போது தகுந்த சமயத்தில் தவ்ஹீத் ஜமாஅத் குட்டு வைத்தவுடன் அடங்குவதும் வாடிக்கையாகிவிட்டது.அந்தவகையி ல் புதுக்கோட்டை மாவட்டம் கடற்கரை பகுதி முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாகும் ,அம்மாபட்டினம்,கோட்டைபட்டினம், கோபாலபட்டினம் போன்ற ஊர்கள் முஸ்லிம் செல்வந்தர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும் இது காவிகளின் கண்ணை உறுத்திக்கொண்டே இருக்கிறது இந்த பகுதி மக்கள் மத நல்லிணக்கத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்வதும் காவி பயங்கரவாதிகளின் கண்ணை உருத்திக்கொண்டுள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பெல்லாம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்ற பெயரில் மீமிசல் பகுதியில் இந்துமுன்னணி பயங்கரவாதிகள் பொதுக்கூட்டம் போட்டு முஸ்லிம்களை திட்டுவதும் ஆபாச அர்ச்சனை செய்வதுமாக இருந்தனர்.தவ்ஹீத் ஜமாஅத் களத்தில் இறங்கி SP மற்றும் DSP போன்றவர்களிடம் புகார்செய்து அவர்களின் கொட்டம் அடக்கப்பட்டுள்ளது.அதேபோன்று இந்த பயங்கரவாதிகள் கடந்த இரண்டு வருடங்களாக மனமேல்குடியிலிருந்து முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் அம்மபட்டினத்தை கடந்து புதுக்குடி என்றகிராமத்தில் விநாயகர் சிலையை கரைப்போம் என்று அடம்பிடித்துவருகின்றனர் தக்க சமயத்தில்அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாத்தினர் இரண்டுவருடங்களாக கலக்டர்,மற்றும் SP, RDO போன்ற உயர்ரதிகாரிகளிடம் இந்த காவி பயங்கரவாதிகளின் சூழ்ச்சியை எடுத்து சொல்லி முறியடித்து வருகின்றனர் இதை பொறுக்க முடியாத சங்கபரிவாரம் இந்த பகுதியில் எப்படியாவது மதக்கலவரத்தை ஏற்படுத்திட சதி திட்டம் தீட்டி வருகின்றனர்.
அதன் வெளிப்பாடுதான் டிசம்பர் 6 ஐ இந்துக்களின் வெற்றிநாள் என்றும் வீரத்திருநாள் என்றும் வெற்றியை கொண்டாட இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைவோம் என்ற வன்முறையை தூண்டக்கூடிய வாசகம் எழுதப்பட்ட பேனர் மீமிசல் கடைவீதியில் கடந்த 02.12.2013 அன்று வைக்கப்பட்டது .
சிறிது நேரத்திற்கு பிறகு பேனரும் அகற்றப்பட்டது.04.12.2013 புதன்கிழமை இரவு மீண்டும் அதே இடத்தில் அந்த பேனர் வைக்கப்பட்டிருந்தது. அத்தோடு மணமேல்குடியில் இந்தியாவின் அவமானச்சின்னம் அகற்றப்பட்ட நாள்,பாரதத்தின் தன்மானம் காக்கப்பட்ட நாள் டிசம்பர் 6 என்ற விசக்கருத்து அடங்கிய மூன்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.கொதித்தெழு ந்த தவ்ஹீத் சகோதரர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தலைவர் அப்துல் குதுஸ் அவர்கள் தலைமையில் வடக்கு அம்மாபட்டினம்,அம்மாபட்டினம் கிளை நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் சங்கபரிவாரின் விஷக்கருத்துக்களை கொண்ட பேனர்கள் உடனடியாக அகற்றப்படவில்லை என்றால் 04.12.2013 புதன் கிழமை மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று காவல்துறையினரிடம் மனு அளித்துவிட்டு பின்னர் உளவுத்துறை மூலம் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாத்தின் துரித முயற்சியால் மீமிசல் மற்றும் மணமேல்குடியில் காவிக்கயவர்களால் வைக்கப்பட்ட பேனர்கள் காவல் துறை மற்றும் தாசில்தார் ஆகியோரின் மேற்பார்வையில் அகற்றப்பட்டு காவிகளின் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
தகவல் : குலாம் பாஷா
No comments:
Post a Comment