அல்லாஹு அக்பர்!!! அல்லாஹு அக்பர்!!
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம்
ஆர். புதுப்பட்டிணம் கிளையில் 2.9.12 அன்று சத்திய பாதையும் , சமுதாய ஒற்றுமையும் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறஇருந்தது. இதை முகமூடி அணிந்த த.மு.மு.க வினர் (உள்ளூர் மன்றம்) எப்படியும் தடுத்து விடலாம் என்று நினைத்து காவல்துறை மற்றும் வருவாய்துறையிடம் சென்றுள்ளனர். காவல்துறையும்,வருவாய்துறைய
ருக்கு
ஆதரவாக செயல்பட்டு பொதுக்கூட்தத்திற்க்கு தடை விதித்தனர். நமது TNTJ
மாவட்ட நிர்வாகிகளும்,கிளை நிர்வாகிகளும் காவல்நிலயத்திர்க்கு சென்று
காவல்துறையினரிடம் கேட்டபோது இந்நிகழ்ச்சியை நிறுத்திவிடுங்கள்
என்றும் இல்லையேல் உங்களை கைது செய்து உள்ளே தள்ளிவிடுவோம் என்று நம்மிடம்
மிரட்டினார்கள். அதற்க்கு நமது சகோதரர்கள் அனுமதி கொடுத்துவிட்டு இப்ப
எதற்க்காக நடத்தக்கூடாது என்று கேட்டதற்கு நடத்தக்கூடாது என்றால்
நடத்தக்கூடாது என்று சொல்லியா பிறகு உங்களால் நிகழ்ச்சியை நடத்த முடிந்தால்
நடதிப்பாருங்கள் என்று மிரட்டும் தோணியில் சவால்விட்டனர் . பின்பு மாநில
தலைமையின் ஆலோசனையின்படி காவல்துறையினரையும், தாசில்தாரையும் கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவெடுத்து அறிவிப்பும்
செய்யப்பட்டது . இந்த செய்தியை கேள்விப்பட்டு பிற மாவட்ட நமது சகோதரர்களும்
பொங்கியெழுந்து திரளாக வரப்போவதை அறிந்த உளவுத்துறை காவல்துறையினரிடம்
தகவலை சொல்லியது அதை கண்ட காவல்துறையினர் கொஞ்சம் ஆட்டம்கண்டுபோய்
பொதுக்கூட்டம் நடத்தவேண்டாம் தெருமுனைக்கூட்டமாக நடத்துங்கள் என்று அனுமதி
கொடுத்தார்கள். பின்பு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கண்டன ஆர்ப்பாட்டம்
மாபெரும் தெருமுனைக் கூட்டமாக மாறியது. இதில் சகோதரர் பக்கிர் முகம்து
அல்தாபி அவர்கள் ஆக்ரோசமாக உரையாற்றினார்கள். இதை பார்த்த காவல்துறையினர்
ஆட்டம் கண்டு சற்று பின்வாங்கினார்கள். இக்கூட்டத்தில் அதிகமான
ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டார்கள். துவாவுடன் நிகழ்ச்சி
முடிவடைந்தது.அல்ஹம்துலில்ல ாஹ்.
No comments:
Post a Comment