Showing posts with label புதுக்கோட்டை மாவட்டம். Show all posts
Showing posts with label புதுக்கோட்டை மாவட்டம். Show all posts

11.2.15

மருத்துவ உதவி-புதுக்கோட்டை மாவட்டம்


புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினம் கிளையை சார்ந்த ஒரு சகோதரரின்  குழந்தைக்கு ஆபரேசன் செய்வதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 44165 வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்  
                                                    

10.2.15

கிளை சந்திப்பு-முக்கனாமலை பட்டி கிளை


முக்கனாமலை பட்டி கிளை சந்திப்பு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில்  கடந்த 08.02.2015 அன்று நடை பெற்றது தாவா பணிகளை வீரியபடுத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது

வீடு வீடாக கல்வி உதவித்தொகை பெறுவது குறித்து விளக்கம்-ஆலங்குடி கிளை



புதுக்கோட்டை மாவட்ட மாணவரணி செயலாளர் சகோதரர் சலீம் அவர்கள் தலைமையில் 08.02.2015 மற்றும் 09.02.2015 ஆகிய இரண்டு நாட்கள் ஆலங்குடி கிளை மானவரனியுடன்  இணைந்து அரசின் கல்வி உதவியை மாணவர்கள் எவ்வாறு பெறுவது என்று  500 வீடுகளுக்கு சென்று  விளக்கி நோட்டிஸ் கொடுத்து விளக்கமளிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் 

மாணவரணி சந்திப்பு-ஆர்.புதுப்பட்டினம் கிளை




புதுக்கோட்டை மாவட்ட மருத்துவரனி செயலாலர் சகோதரர் சித்திக் ரஹ்மான் அவர்கள் தலைமையில் ஆர்.புதுப்பட்டினம் கிளை மாணவரனி சத்திப்பு நடை பெற்றது

கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி-ஆலங்குடி கிளை


ஆலங்குடி கிளையில் அரசு வழங்கும் கல்வி உதவித்தொகையை மாணவர்கள் பெறுவதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி 09.02.2015 அன்று  புதுக்கோட்டை மாவட்ட மாணவரணி செயலாளர் சலீம் அவர்கள் கிளை மாணவர்களுக்கு வழங்கினார்கள் 

மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம்-ஆலங்குடி கிளை


ஆலங்குடி கிளையில் மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் 08.02.2015 அன்று மாவட்ட மாணவரணி செயலாளர் சகோதரர் சலீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் மாணவர்களுக்கு தாவா பணிகளை எப்படி மேற்கொள்வது என்று விளக்கப்பட்டது 

9.2.15

தீர்மான எதிரொலி அதிகாரிகள் மருத்துவ மனனை ஆய்வு -புதுக்கோட்டை மாவட்டம்



புதுக்கோட்டை மாவட்டச் செயற்குழு கூட்டம் கடந்த 01.02.2015 அன்று நடைபெற்றது அதில் மணமேல்குடி அரசு மருத்துவமனையை தாலுகா தலைமை மருத்துவமனையாக அறிவித்து போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அது பத்திரிகை செய்தியாகவும் வந்துள்ளது அதன் எதிரொலியாக கடந்த 07.02.2015 அன்று உயரதிகாரிகள் மாவட்ட நிர்வாகிகளை அழைத்து நமது கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர் கோரிக்கைகள் நிறை வேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளனர். இல்லாத பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்று அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது 

2.2.15

புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு-பத்திரிக்கை செய்தி

                          இறைவனின் திருப்பெயரால்...



புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு 01.02.2015 அன்று அறந்தாங்கி TNTJ மர்கஸில் நடை பெற்றது அது குறித்து ஹிந்து மற்றும் தினகரன் நாளிதழில் வெளியான பத்திரிக்கை செய்திகள் மற்றும் தீர்மானம் 





தீர்மானம்1
சமூக வலைதளங்களில் கருத்துச் சுதந்திரம் என்கிற போர்வையில் அநாகரீகமாகவும், அறுவறுக்கத்தக்க   வகையிலும்,மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும் கருத்திடுவோரை  கண்டறிந்து அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் இச்செயற்குழு  கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்2
 நாட்டின் உணவு உற்பத்திக்கு ஆதாரமாக இருக்கின்ற விவசாய விளை நிலங்களை ரியல் எஸ்டேட் என்கிற பெயரில் பிளாட் போட்டு விற்பதை குற்றம் என்று அறிவிக்க  உடனடியாக அவசர சட்டம் இயற்ற வேண்டுமாய் மத்திய  மாநில அரசுகளை இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்3
எந்த நாடு வேளான்மை  உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருக்கிறதோ அந்த நாடே எதிகாலத்தில் வல்லரசு நாடாக கருதப்படும் எனவே வேளாண்மை சார்ந்த துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து,வேளாண்மை துறையில்  நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை கையாண்டு அழிந்து வரும் விவசாய தொழிலை பாதுகாக்க தகுந்த முன்னேற்பாடுகளை செய்ய வேண்டுமாய் இச்செயற்குழு மூலம் மத்திய  மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறோம்

தீர்மானம்4
மது என்கிற அரக்கனுக்கு உழைக்கும் மக்களயும்  ,மாணவர்களயும்  அடிமையாக்கி தமிழகத்தை   போதையில் தத்தளிக்க வைத்திருப்பது  வேதனைக்குரிய விசயமாக இருக்கிறது 
மதுவினால் இலட்சக்கணக்கான பெண்கள் கணவனை இழந்து விதவைகளாகவும்,அனாதைச் சிறுவர்கள் அதிகம் நிறைந்த மாநிலமாகவும்  தமிழகம் திகழ்கிறது,இப்படி பல உயிர்களை கொன்று பெண்களை விதவைகளாக்கி,சிறுவர்களை அனாதைகளாக்கி கிடைக்கும் டாஸ்மாக் வருமானத்தின் மூலம் அரசுநிர்வாகத்தை நடத்த வேண்டுமாஎன்பதை தமிழக அரசு மனசாட்சியுடன் சிந்தித்து மதுவை தடை செய்து தமிழகத்தை பூரண மது விலக்கு பெற்ற மாநிலமாக அறிவிக்க வேண்டுமாய் இச்செயற்குழு தமிழக அரசை வழியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்5
196 கிராமங்கள் மற்றும் 28 ஊராட்சிகளை கொண்ட மணமேல்குடி தாலுகாவில்,பலகோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அரசுமருத்துவமனை மக்கள் தொகைக்கு ஏற்ப போதிய மருத்துவர்களும்,செவிலியர்களும் இல்லாமல் செயலிழந்து காணப்படுகிறது.போர்கால அடிப்படையில் இந்த மருத்துவமனையை தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டுமாய்  தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

தமிழக அரசு இந்த விசயத்தில் தொடர்ந்து மெத்தனம் காட்டினால் 196 கிராம மக்களையும் ஓன்று திரட்டி மருத்துவ மனையை இழுத்து மூடும் போராட்டத்தை தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் என்றும் இச்செயற்குழு எச்சரிக்கின்றது

தீர்மானம்6
ஆர்.புதுப்பட்டினத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த 21 குடும்பங்களை சமூக புறக்கணிப்பு செய்து ஊர்நீக்கம் செய்துள்ள உள்ளூர் ஜமாஅத் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அந்த மக்கள் தங்கள் சொந்த ஊரில் சம உரிமையுடனும், பாதுகாப்புடனும் வாழ வழி செய்ய வேண்டுமாய் தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் இச்செயற்குழு வழியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்7
அறந்தாங்கியில் அனைத்து முக்கிய சாலைகளும் புதிய சாலை அமைப்பதற்காக  JCB இயந்திரத்தின் மூலம் உடைக்கப்பட்டு  ஒருவார காலமாக அறளை  ஜல்லி கற்களாக காட்சியளிக்கின்றது சாலைப்பணிகளை மெத்தனமாக மேற்கொள்ளும் அறந்தாங்கி நகராட்சியை  இச்செயற்குழு வன்மையாக கண்டிகிறது துரிதகதியில் சாலைப்பணியை மேற்கொள்ளுமாறு அறந்தாங்கி நகராட்சியை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

                                                                                                              
 




                                                                                                                       

மாவட்ட செயற்குழு-புதுக்கோட்டை மாவட்டம்






புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் அப்துல் குத்தூஸ் அவர்கள் தலைமையில் 01.02.2015 அன்று அறந்தாங்கி TNTJ மர்கஸில் காலை 7 மணிக்கு நடை பெற்றது இதில் மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள் 

தாவா பணியில் சிறப்பாக செயல்பட்ட மூன்று கிளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது 

முதல் பரிசு:அறந்தாங்கி (பத்தாயிரம் மதிப்புள்ள மெகா போன்)
இரண்டாம் பரிசு:முக்கனாமலை பட்டி (இரண்டாயிரம் மதிப்புள்ள புத்தகம்)

மூன்றாம்பரிசு:அம்மாபட்டினம் (ஆயிரம் மதிப்புள்ள புத்தகம் )
                                                                                                            

22.1.15

மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்-புதுக்கோட்டை மாவட்டம்


புதுக்கோட்டை மாவாட்ட நிர்வாக குழு கூட்டம் 21.01.2015 அன்று புதுக்கோட்டை மார்த்தாண்டபுரம் கிளை மர்கஸில் நடை பெற்றது இதில் காரையூர் பொதுக்கூட்டம் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது,மருத்துவ உதவி கேட்டு வந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது,கிளை சந்திப்பு குறித்து விவாதிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் 
                                                   

கிளை சந்திப்பு-புதுக்கோட்டை மாவட்டம்


புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பாக 22.01.2015 அன்று மாவட்ட துணை செயலாளர் சகோ.பாரூக்,மாணவரணி செயலாளர் சித்திக் ரஹ்மான் ஆகியோர்கள் தலைமையில் காரையூர் கிளை சந்திப்பு நடைபெற்றது இதில் எதிர்வரும் 24.01.2015 அன்று நடக்க விருக்கும் பொதுக்கூட்ட பணிகள் குறித்து கேட்டறிந்து தக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டது அல்ஹம்துளிலாஹ்

20.1.15

கிளை சந்திப்பு-அம்மாபட்டினம்


அம்மாபட்டினம் மார்க்கஸில் 16/1/15 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு  கிளை சந்திப்பு நடைபெற்றது இதில் கிளை வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது 

கிளை சந்திப்பு-கோபலபட்டினம் கிளை



 கோபலபட்டினம் கிளை சந்திப்பு 14.1.2015 அன்று காலை மாவட்ட மருதுவரணி செயலாளர் சித்திக் தலைமையில்  நடைபெற்றது அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

1. வாரந்தோறும் சனிக்கிழமை பெண்கள் பயான் நடத்துவது.
2. வாரந்தோறும் புதன்கிழமை தெருமுனை பிரச்சாரம் நடத்துவது.
3. தினந்தோறும் காலை மாலை மக்தப் மதரஸா நடத்துவது.
4. வரக்கூடிய பிப்ரவரி 15 அன்று மாபெரும் இரத்ததான முகாம் நடத்துவது.அல்ஹம்துலில்லாஹ்.

மாவட்ட நிர்வாக குழு-புதுக்கோட்டை மாவட்டம்


புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் அப்துல் குதுஸ் அவர்கள் தலைமையில் 17.01.2015 சனிக்கிழமை காலை 8 மணிமுதல் 10.30 வரை நடைபெற்றது,இதில் கிளைகள் சீரமைப்பு,மாவட்ட செயற்குழுவை எதிர்வரும் 01.02.2015 அன்று நடத்துவது,தாயிபயிற்சி வகுப்பு நடத்துவது போன்ற ஆலோசனைகள் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
                                                                                           

7.1.15

மாணவரணி மாவட்ட தர்பியா புதுக்கோட்டை மாவட்டம்



புதுக்கோட்டை மாவட்ட மாணவரணி சார்பாக அறந்தாங்கியில் 27/12/2014 அன்று மாணவர்களுக்கான தர்பியா நடைபெற்றது , இதில் சகோ. சையது இப்ராஹிம் , அஸ்ரப்தீன் பிர்தவ்சி , அப்துல் ரஹ்மான் ஆகியோர் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

6.1.15

நோட்டிஸ் விநியோகம்-புதுக்கோட்டை மாணவரணி


புதுக்கோட்டை மாவட்ட மாணவரணி சார்பாக 05.01.2015 அன்று பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு வழிகாட்டி நோட்டீஸ் 500 விநியோகிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

5.1.15

கிளை சந்திப்பு -முதுகுடா 04.01.2015


முதுக்குடா கிளை சந்திப்பு மாவட்ட செயலாளர் சகோ.ஜிஎம்.பாஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் கிளை வளர்ச்சிப்பணிகள் குறித்தும்,தாவாவை வீரியப்படுத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

4.1.15

மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம்- மற்றும் கிளை சந்திப்பு 03.01.2015


புதுக்கோட்டை மாவட்டம் மாணவரணி சார்பாகா ECR பகுதி கிளைகளுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட மருத்துவரணி செயலாளர் சகோ.சித்திக் ரஹ்மான் தலைமையில் 03.01.2015 அன்று நடை பெற்றது இதில் ECR பகுதி கிளைகள் இணைந்து இன்ஷா அல்லாஹ் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற நிகழ்ச்சி வரும் ஜனவரி 31 அன்று நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

கிளை சந்திப்பு-கோட்டைபட்டினம்-02.012014


புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கோட்டைபட்டினம் கிளை சந்திப்பு 02.01.2014 அன்று மாவட்ட மருத்துவரணி செயலாளர் சகோ.சிதிக்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது இதில் தாவா பணிகளை வீரியப்படுத்துதல்,வாரந்தோறும் பெண்கள் பயான்,நோட்டிஸ் விநியோகம்,மெகா போன் பிரச்சாரம், சேவை நிருவனங்களின் உண்டியல்களை அதிகப்படுத்துவது போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டது மேலும் எதிர்வரும் ஜனவரி 26 அன்று மாபெரும் இரத்ததான முகாம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

31.12.14

மாவட்ட பொதுக்குழு பத்திரிக்கை செய்தி


புதுக்கோட்டை மாவட்டத்தின் 9வது பொதுக்குழு புதுக்கோட்டை ஐஸ்வர்யா மகாலில் நடை பெற்றது அது குறித்த தினகரன் பத்திரிகை செய்தி